மேலும் அறிய

Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?

யோகி பாபு நடித்துள்ள அவரது 300வது படமான அர்ஜுனன் பத்து படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமாகி தனது உடல்மொழி, நகைச்சுவையால் ரசிகர்களால் பிரபலமானவர். குணச்சித்திர நடிகராகவும் உலா வரும் யோகி பாபு கதாநாயகனாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

யோகி பாபுவின் 300வது படம்:

இந்த நிலையில், யோகி பாபு நடிக்கும் 300வது படமாக அர்ஜுனன் பத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீசாகியுள்ளது. மிகவும் யதார்த்தமான கதையம்சத்துடன் இந்த படம் உருவாகியிருப்பதை ட்ரெயிலர் உணர்த்துகிறது. 

சரக்கு வாகனத்தை புதியதாக வாங்கிய யோகி பாபுவும், அதை தனக்கு சொந்தம் என்று காளி வெங்கட் உரிமை கொண்டாடுவதும் இது காவல்நிலையத்திற்கு வழக்காக செல்வதும், வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளிவருவதுமே படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 

அர்ஜுனன் பேர் பத்து:

இந்த படத்தின் யோகிபாபு, காளிவெங்கட், அருள்தாஸ், மைனா நந்தினி, அனாமிகா மஹி, மதன்குமார், லெனின் பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளார். கிருத்திகா தங்கப்பாண்டி தயாரித்துள்ளார்.

யோகிபாபு கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்களில் அவரது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்த படங்களிலே நடித்து வருகிறார். மண்டேலோ, லக்கிமேன் போன்ற நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களிலும் அவர் நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் அர்ஜுனன் பேர் பத்து படமும் இடம்பெறுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கோடை விருந்து:

ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், பிரபுதேவா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து யோகிபாபு நடித்துவிட்டார். அவரது 300வது படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கோடை விடுமுறையாக இந்த படம் வெளியாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Embed widget