மேலும் அறிய

Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

தனது சாதியின் பெயரை குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் பேசியது சர்ச்சையான நிலையில் ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது, தவறு செய்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என வருத்தப்பட்டுள்ளார் பார்த்திபன்.

ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் அடுத்து வெளியாகவுள்ள படம் உஸ்தாத் பகத்சிங். இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். 19ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன் தன்னை நாயுடு என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையானது.

அவரது பேச்சுக்கு தமிழ் திரையுலகில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் வாய் தவறி பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார் பார்த்திபன். இதுதொடர்பான அவரது பதிவில் சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். 

இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Embed widget