மேலும் அறிய

TVK Vijay: உண்மை தெரிந்தால் விஜய் ஆட்டம் முடியும்.. தவெகவினரை வம்பிழுக்கும் மோகன் ஜி!

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கவில்லை என அறிவித்துள்ள நிலையில் இயக்குநர் மோகன் ஜி விஜயை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

கரூர் சம்பவத்தில் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரின் ஆட்டம் முடியும் என இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார். 

வரும் ஏப்ரல் 23ம் தேதி 2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்கவுள்ளது. இப்படியான நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்து போட்டி என அறிவித்து விட்டார். இது தவெக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்த தரப்பினருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கரூர் சம்பவம் மீண்டும் கிளறப்பட்டுள்ளது. 

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 3 முறை நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். 

இதனிடையே மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். அப்போது எந்த கூட்டணியிலும் இணையவில்லை, தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தினார். அடுத்த சில மணி நேரத்தில் கரூர் சம்பவம் குறித்தும், அதில் விஜய் மீது தான் தவறு உள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாக தொடங்கியது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகின்றனர். 

இந்த நிலையில் பாஜக ஆதவராளராக அறியப்படும் யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான வீடியோ பதிவுகள் அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இது தான் கரூர் டிரோன் காட்சிகள் விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் மீட்கும் பணியானது சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல்.  இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேமரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.

இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை. பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரணைக்கு” என தெரிவித்திருந்தார். 

இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, ”கரூர் சம்பவத்தின் காட்சிகளை பதிவு செய்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்தும், மொபைல் டவர் தரவுகள், இருப்பிடத் தோராயக் கணிப்புகள், மற்றும் சிடிஆர் பதிவுகள் போன்ற உறுதியான ஆதாரங்களைப் பயன்படுத்தி சிபிஐ அறிவியல் பூர்வமாக நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால், ஆட்டம் முடிந்தது” என தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவில்லை என்பதற்காக மோகன் ஜி விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget