மேலும் அறிய

Vishal: உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க.. சி.வி.சண்முகத்துக்கு விஷால் எச்சரிக்கை!

நீங்க சமீபத்தில் எங்கள் சினிமா துறை சார்ந்த கதாநாயகி பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினீர்கள். பெண்களை மதித்தால் தான் நமக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என விஷால் சி.வி.சண்முகத்திற்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அதிமுக மாநிலங்களவை எம்.பி.,  சி.வி.சண்முகத்திற்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது மு.க.ஸ்டாலினின் உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், அதில் நடிகை நயன்தாரா பெயரை சொல்லி சர்ச்சையாக பேசினார். 

உடனடியாக சி.வி.சண்முகம் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வாய் தவறி அவரின் பெயர் வந்து விட்டதாகவும், தவறுக்கு வருந்துவதாகவும் சி.வி.சண்முகம் விளக்கமளித்தார். 

இப்படியான நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சி.வி.சண்முகத்திற்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்க சமீபத்தில் உங்கள் கட்சி நிகழ்ச்சியில் எங்கள் சினிமா துறை சார்ந்த கதாநாயகி பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினீர்கள். அதற்கு நிறைய பேரு கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அந்த கட்டாயத்தை நீங்கள் தான் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்  நாங்களும் அதனை கண்டித்தோம். இப்போது இந்த வீடியோவை வெளியிட காரணம், ஒரு நடிகர், சமூக அக்கறை கொண்டவன், வாக்காளன், பார்வையாளர், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக கூட இருக்கலாம். 

நீங்க பேசிய வார்த்தைகள் ஒரு பெண்மணி ஒரு நடிகை, குடும்ப பெண்மணி, இந்திய சினிமாவில் பிரபலமானவர். நீங்கள் கைதட்ட வாங்குவதற்காக இப்படி ஒருவரை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீங்க  ஏதாவது நலத்திட்டம் அறிவிச்சி கைதட்டல் வாங்கியிருந்தால் நாங்கள் மகிழ்ந்திருப்போம். ஆனால் அந்த நேரத்தில் இந்த மாதிரி தவறான கருத்தை அந்த நடிகை பற்றி பேசியிருக்கிறீர்கள்.

நீங்கள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளீர்கள். ஜெயலலிதாவை பொறுத்தவரை பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல மரியாதையும் இருந்தது. உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் தவறான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். மக்கள் மத்தியில் உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பெண்களை மதித்தால் தான் நமக்கு ஒரு மதிப்பு கிடைக்கும். அது கடமை. அது மனதார வரவேண்டும். சினிமா மட்டுமல்ல உங்கள் கட்சிக்குள் இருக்கும் பெண்மணியை பேசினால் கூட மீண்டும் இதுபோன்று வீடியோ வெளியிடுவேன்” என விஷால் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget