மேலும் அறிய
Samantha Insta Post : ஜெயிலில் போடணும்..3 பக்கத்திற்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!
Samantha Insta Post : “சமந்தா சொல்லும் வைத்திய முறை தவறானவை. அதற்காக அவரை சிறையில்தான் அடைக்க வேண்டும்” என மருத்துவர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
சமந்தா
1/6

நடிகை சமந்தா கடந்த சில காலமாக மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
2/6

இதனால் படங்களில் பெரிதாக நடிக்காமல் இருக்கிறார். உடல்நலத்தை காக்க ஆன்மிகம், உடற்பயிற்சி, தியானம், பயணம் என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
3/6

படம் குறித்த அறிவிப்புகள், ட்ரிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போட்டோஷூட் ஸ்டில்ஸ் உள்ளிட்டவற்றை மட்டும் போஸ்ட் செய்து வந்த சமந்தா, மருத்துவம் சார்ந்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
4/6

இதுபோன்ற வீடியோ ஒன்றில் மருத்துவர் ஒருவர், சமந்தாவை கமெண்ட் செக்ஷனில் கடுமையாக விமர்சித்துள்ளார். சமந்தா சொல்லும் வைத்திய முறை தவறானவை. அதற்காக அவரை சிறையில்தான் அடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.டியோ ஒன்றில் மருத்துவர் ஒருவர், சமந்தாவை கமெண்ட் செக்ஷனில் கடுமையாக விமர்சித்துள்ளார். சமந்தா சொல்லும் வைத்திய முறை தவறானவை. அதற்காக அவரை சிறையில்தான் அடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
5/6

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மூன்று பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பின்பற்றும் மருத்துவத்திற்கான செலவுகள் மிகவும் அதிகமானது என்றும் அவை தன்னை முழுவதுமாக குணப்படுத்தவில்லை என்று உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
6/6

“மாற்று மருத்துவ முறைகளை அணுகி நல்ல மாற்றத்தை கண்டேன். அத்துடன் மாற்று மருத்துவத்திற்கான செலவு மிகவும் குறைவுதான்.மற்றவர்களுக்கும் அது உதவும் என்ற நல்ல எண்ணத்துடன் தகவல்களை பகிர்ந்தேன். ஆனால் ஒரு மருத்துவர், என்னை கடுமையாக சாடியுள்ளார். என் மருத்துவருக்கும் என்னை விமர்சித்த மருத்துவருக்கும் இடையே உரையாடல் நடத்தினால் தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்..” என அவர் கருத்துக்களை பகிர்ந்துள்ளார் சமந்தா.
Published at : 05 Jul 2024 12:10 PM (IST)
Tags :
Samanthaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆட்டோ
பொழுதுபோக்கு
ஆட்டோ
Advertisement
Advertisement





















