DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
DMDK Election Plan: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதிமுக மற்றும் திமுக என இரு தரப்பும் தேமுதிகவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், எந்த பக்கம் தாவும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. எந்த கட்சி எந்த பக்கம் உள்ளது, எந்த பக்கம் தாவ தயாராகி வருகிறது என திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆளும்கட்சியான திமுக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பலம் வாய்ந்த கூட்டணியோடு உள்ளது. இந்த அணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே நேரம் திமுகவை வீழ்த்த அதற்கு இணையாக கூட்டணியை பலப்படுத்த அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. தற்போது வரை பாஜக, தமாக, புதிய நீதிகட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே உள்ளது. அடுத்ததாக பாமகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாமக நிலைப்பாடு என்ன.?
இதில் பாமக இரண்டு தரப்பாக உடைந்துள்ள நிலையில், அன்புமணி ஒரு அணியாகவும், ராமதஸ் ஒரு அணியாகவும் உள்ளனர். எனவே இந்த இரண்டு அணியையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. இதில் அன்புமணி தரப்பு ஓகே சொன்ன நிலையில், ராமதாஸ் இன்னும் பிடி கொடுக்காமல் உள்ளார். திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாமா.? என தங்கள் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.இதேபோல தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக- பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் ராஜ்யசபா சீட் தங்கள் கட்சிக்கு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்த அதிமுக ஏமாற்றிவிட்டதாக அதிருப்தியில் உள்ளது.
தேமுதிக கூட்டணி நிலைப்பாடு என்ன.?
இதனையடுத்து தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு இடம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடர்வதாக எந்த அறிவிப்பையும் தேமுதிக அறிவிக்கவில்லை. வருகிற ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திமுகவும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக தலைமையிடத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ள அமைச்சர் ஒருவர் தேமுதிக தலைமையிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திமுக.? அதிமுகவா.? ஜனவரி 9ஆம் தேதி முடிவு
ராஜ்யசபா சீட் வழங்குவதாக உறுதி அளித்த அவர், திமுக கூட்டணியில் 4 முதல் 5 தொகுதிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தென் மற்றும் வட மாவட்டங்களில் வெற்றி வாய்புள்ள தொகுதியையும் தேமுதிகவிற்கு ஆப்பர் வழங்கியுள்ளது திமுக, இதனிடையே தேமுதிக நிர்வாகியான விஜய் பிரபாகரும் திமுக கூட்டணிக்கு செல்லவே விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில மாதங்களாகவே திமுக ஆட்சியை விமர்சிக்காமல் பிரேமலதா அமைதி காத்து வருகிறார். எனவே அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என கூறும் வகையில் எது வேண்டும் என்றாலும் கடைசி நேரத்தில் நடக்கும். ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாட்டில் எந்த கூட்டணி என அறிவிக்கப்போகும் முடிவுக்காக அரசியல் வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.





















