Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Gold Rate 25-12-2025: தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டிய பிறகும், மேலும் மேலும் உயர்ந்து வருகிறது. இன்றும் சவரனுக்கு 160 ரூபாயை விலை உயர்ந்துள்ளது. தற்போது விலை என்ன தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாயை தாண்டிய நிலையிலும், தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் சவரனுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்துள்ள நிலையில், இது எங்கு சென்று முடியுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. வெள்ளியும் அதன் பங்கிற்கு புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், இன்றும் விலை உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் இன்றைய விலையை பார்க்கலாம்.
மேலும் மேலும் உயரும் தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த கடந்த வார இறுதியில் சற்று விலை உயர்ந்து, 20 மற்றும் 21-ம் தேதிகளில், ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விறபனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், வாரத்தின் தொடக்க நாளான 22-ம் தேதி, ஒரே நாளில் 1,360 ரூபாய் விலை உயர்ந்து, 1 லட்சம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, அன்று காலை கிராமிற்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,480 ரூபாயை எட்டியது. அதன்படி, சவரனுக்கு 640 ரூபாயை விலை உயர்ந்து, ஒரு சவரன் 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,00,560 ரூபாய்க்கும், கிராமிற்கு 90 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம், 12,570 ரூபாய்க்கும் விற்பனையானது.
பின்னர், 23-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 12,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,160 ரூபாய்க்கும் விற்பனையானது. இதைத் தொடர்ந்து, 24-ம் தேதியான நேற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 1,02,560 ரூபாயாக மீண்டும் எகிறியுள்ளது. கிராமிற்கு 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தற்போது 12,820 ரூபாயாக உள்ளது.
வெள்ளியின் விலையும் புதிய உச்சம்
இதேபோல், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இறுதியில், அதாவது, 20 மற்றும் 21-ம் தேதிகளில், ஒரு கிராம் 226 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், 22-ம் தேதி மீண்டும் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 231 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது வெள்ளி. இந்த நிலையில், 23-ம் தேதி கிராமிற்கு மீண்டும் 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 234 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது.
பின்னர், 24-ம் தேதியான நேற்று, கிராமிற்கு அதிரடியாக 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 244 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது.
இந்த சூழலில், இன்றும் கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 245 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி, 1000 ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருவதால், பொதுமக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.





















