OTP Mandatory Tatkal Ticket Booking : இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
OTP Mandatory Tatkal Ticket Booking : ரயில் பயணங்களை மக்கள் அதிகளவில் விரும்பி வரும் நிலையில், தட்கல் டிக்கெட்டில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரயில் தட்கல் டிக்கெட முன்பதிவு செய்ய புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்
நவீன காலத்திற்கு ஏற்ப சொகுசான போக்குவரத்து வசதிகள் உருவாகிக்கொண்டே வருகிறது. அதிலும் அதிநவீன சொகுசு பேருந்துகளும் களம் இறங்கியுள்ளது. இருந்த போதும் மக்கள் நீண்ட தூர பயணங்கள் செய்யும் போது பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டுமே, பாதுகாப்பு வசதிகளோடு அடிப்படை வசதிகளும் அதிகமாக ரயில் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. எனவே கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு, சிறப்பு ரயில் இயக்கம் என எந்த நடவடிக்கை எடுத்தாலும் கூட்டத்தை மட்டும் கட்டுப்படுத்த மட்டும் முடியாமல் திணறி வருகிறது.
தட்கல் டிக்கெட் முறைகேடு
அதிலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்த நபர்கள் பயணிக்கும் நிலையும் உள்ளது. இது மட்டுமில்லாமல் ரயில்களில் முன்பதிவு கிடைக்காதவர்கள் கடைசி நேரத்தில் தட்கல் டிக்கெட் மூலம் பயணம் செய்ய விரும்புவார்கள். ஆனால் அதிலும் முறைகேடு நடைபெற்று வருகிறது. தனியார் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனைடுத்து ஐஆர்டிசி இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் என அறிவித்தது அமல்படுத்தியது.இந்த நிலையில் அடுத்ததாக ஐஆர்டிசி இணையதளம், மொபைல் செயலி, ரயில்வே டிக்கெட் கவுண்டர் போன்ற இடங்களில் தட்கல் முன்பதிவு செய்யும் போது ஓடிபி கொடுத்த பிறகே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
தட்கல் டிக்கெட் - ஓடிபி கட்டாயம்
இந்த புதிய நடவடிக்கையால் உண்மையான பயணிகள் பயணிக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கான ஒரே நேர கடவுச்சொல் (OTP) சரிபார்ப்பு வசதி முதல் கட்டமாக 5 ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தட்கல் டிக்கெட் பெறும்போது OTP மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய நடைமுறை கடந்த 23.12.2025 முதல் அமலில் வந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது முதல்கட்டமாக டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்படும் (ரயில் எண் 12656) நவஜீவந் அதிவேக எக்ஸ்பிரஸ் (அஹமதாபாத் நோக்கி),
5 ரயில்களில் ஓடிபி அறிமுகம்
(ரயில் எண் 12842) கொரோமண்டல் அதிவேக எக்ஸ்பிரஸ் (ஹௌரா நோக்கி), (ரயில் எண் 22160) மும்பை CSMT அதிவேக எக்ஸ்பிரஸ் ஆகியவை இதில் அடங்கும். மேலும், (ரயில் எண் 22158) சென்னை எக்மோர் – மும்பை CSMT அதிவேக எக்ஸ்பிரஸ் மற்றும் (ரயில் எண் 13352) ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த OTP அமைப்பு அமல்படுத்தப்படுகிறது.தட்கல் முன்பதிவு செய்யும் அனைவரும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.டிக்கெட் முன்பதிவில் குற்றச்செயல்கள் குறைய வாய்ப்பு உள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது.





















