மேலும் அறிய
800 Movie : முத்தையா முரளிதரனின் பயோபிக் பட ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!
800 Movie : முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படுள்ள 800 படத்தின் ட்ரெய்லரை சச்சின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

800 படம்
1/6

கடந்த 2020 ஆம் ஆண்டு மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் முன்னாள் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களும் வெளியாகியது. முரளிதரனின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதை குறிப்பிடும் வகையில் இந்த படத்திற்கு “800” என பெயரிடப்பட்டது.
2/6

தமிழில் எடுக்கப்படும் இப்படத்தை இந்தி, வங்காளம், சிங்களம் என டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். தொடர் சர்ச்சைகள் காரணமாக முரளிதரனே விஜய் சேதுபதியை இந்த படத்தில் விலகி கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பான பதிவை குறிப்பிட்டு “நன்றி வணக்கம்” என விஜய் சேதுபதி பதில் தெரிவித்திருந்தார்.
3/6

பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் 800 படம் குறித்து கேள்வியெழுப்பப்பட, அதற்கு “நன்றி வணக்கம்” என சொன்னவுடனே அது முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனி அதைப்பற்றி பேச ஒன்றும் இல்லை என விளக்கமளித்தார். இதனால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
4/6

இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது '800' படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார்.
5/6

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மும்பையில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
6/6

மேலும் 800 படத்தின் ட்ரெய்லரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
Published at : 04 Sep 2023 05:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
மயிலாடுதுறை
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement