Gold And Silver Rate Today: மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
Gold And Silver Rate Today: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதா.? என்பதை தற்போது பார்க்கலாம்..

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள். அதற்கு ஏற்ப பலரும் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த 2 வருடங்களில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 55ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 6ஆயிரத்தை தாண்டியுள்ளது. சரியாக ஒரு வருடத்தில் இரண்டு மடங்காக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்க நகைகளை வாங்க திணறும் மக்கள்
அதே நேரம் தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தங்களது வீட்டு திருமணங்களுக்கு குறைந்தது 20 சவரன் வாங்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் தற்போது 10 சவரன் வாங்குவதற்கே திணறும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தங்கம் அத்தியாவசிய தேவைக்கு உதவும் அட்ஷய பாத்திரமாக உள்ளது. எனவே மருத்துவ செலவு, கல்வி போன்றவற்றிற்கு உடனடியாக அடகு வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடிகிறது.
போட்டி போட்டு உயரும் வெள்ளி விலை
எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் எதிர்கால தேவைக்காக இப்போதே தங்கத்தை வாங்கி வைக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு பக்கம் உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியிலும் அதிக மூதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறு.
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது எப்போது குறையும் என காத்திருந்த மக்களுக்கு நேற்று ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 13,230 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல வெள்ளியின் விலையும் குறைந்தது. கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து 306 ரூபாய்க்கு விற்பனையானது ஒரு கிலோவிற்கு 3 லட்சத்து 6ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?
இந்தநிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1லட்சத்து 6ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 4ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செயப்பட்டு வருகிறது.





















