TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
TTV Dhinakaran assembly election alliance: தமிழக சட்டமன்ற தேர்தலில் தினந்தோறும் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 15 நாட்களாக திறைமறைவில் இருந்த டிடிவி தினகரன் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் தேர்விலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. அதற்கு ஏற்ப கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜகவை தங்கள் அணியில் இணைத்துள்ளது. இதே போல கடந்த முறை பாஜக தலைமையில் கூட்டணியில் இருந்த பாமக இந்த முறை அதிமுக கூட்டணிக்கு பல்டி அடித்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களால் 4 பிளவாக அதிமுக பிரிந்தது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தனி தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இதன் காரணமாக அதிமுக வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வாய்ப்பே இல்லையென மறுத்தார். அதே நேரம் பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். எனவே அதிமுகவிற்கு எதிராக விஜய் தலைமையிலான கூட்டணியில் டிடிவி இணைவார் என தகவல் வெளியானது.
இதற்கு ஏற்ப கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் தவெக அணியில் இணைவது தொடர்பாக சூசகமாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவிக்கும் கூட்டணியில் இடம்பெறமாட்டோம் என கூறியிருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சென்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டேன் என உறுதியாக இருந்த டிடிவி தினகரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகவும், அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
தினந்தோறும் ஏதாவது ஊரில் செய்தியாளர்களை சந்தித்து கருத்துகளை தெரிவித்து வந்த டிடிவி தினகரன் திடீரென தலைமறைவானார். கடந்த 15 நாட்களில் ஒரு முறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. எனவே இந்த 15 நாட்களில் நடந்தது என்ன.? என கேள்வ்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய சந்திப்பில் அதிமுக கூட்டணியில் இணைகிறாரா.? அல்லது பாஜக தலைமையிலான அணியில் இணைகிறாரா.? என்ற கேள்விக்கு முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி வருகிற 23ஆம் தேதி சென்னை வரவுள்ளார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் தொடர்பான பேனர்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்டு வருகிறது. அதில் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















