பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
இந்தியாவில் பல மாநிங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அடுத்தடுத்து சந்தித்து வரும் தோல்விகளால் தடுமாறி வருகிறது. இந்த நிலையில், பீகாரில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களும் பாஜக கூட்டணியில் இணைய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசியலும்
இந்தியாவில் மிகப்பெரிய கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சியை தான் குறிக்கும். வரலாற்றுப் பாரம்பரியமிக்க கட்சி, சுதந்திரத்திற்குப் பிறகு 49 ஆண்டுகள் மத்திய அரசை ஆண்டது. ஆனால் வருடங்கள் செல்ல செல்ல மாநிலத்தில் சுயேட்சைகள் பெற்ற வெற்றியை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியாமல் தவித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவிற்கு வந்தது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்கள், 2019இல் 52 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 10 ஆண்டுகள் கழித்தும் இந்தியா கூட்டணியின் உதவியோடு 99 இடங்களை காங்கிரஸ் பெற்றது.
காங்கிரசை வீழ்த்திய பாஜக
காங்கிரஸ் கட்சியின் வீழ்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உட்கட்சி மோதல் தான். ஒருவர் மேலே ஏறினால் அவரை கிழே இறக்கி விடுவதற்கு பலரும் போட்டி போட்டு வேலைபார்ப்பார்கள். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் முழுமையாக காங்கிரஸ் தோற்றது. பாஜகவின் அதிரடி அரசியல் தேசியவாத அரசியல் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது. கட்சி புதிய அரசியல் போக்குகளுக்கு ஏற்ப மாறவில்லை என்றே கூறப்படுகிறது. கட்சிக்குள் பிரிவுகள், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறுதல். அடிமட்ட தொண்டர்களுடன் மேலிடம் தொடர்பை இழந்தது, மாநில அளவில் தலைவர்களை வளர்க்கவில்லையென்பதும் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பாஜக
இதற்கு ஏற்ப பாஜகவும் பிளான் போட்டு காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக காலி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பவர் புல் தலைவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்தது. பல தலைவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் வேறு வழியில்லாமல் ஒன்று பாஜகவில் இணைந்தனர். அல்லது சைலண்ட் மோடிற்கு சென்றனர். இதனால் பல மாநிலங்களில் காங்கிரஸ் வீக்கானது. இந்த நிலையில் தான் பீகாரிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி கிடைத்தது.
அந்த வகையில் 61 தொகுதிகளில் வேண்டும் என அடம்பிடித்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 6 தொகுதிகளை மட்டுமே வென்றது. தற்போது இந்த 6 எம்எல்ஏக்களும் பாஜக கூட்டணிக்கு பல்டி அடிக்க தயாராகிவிட்டனர். பீகார் தேர்தல் முடிவடைந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் இந்த 6 எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைமை நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வருகிறார்கள். இந்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நிதீஸ்குமாருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள். விரைவில் ஜேடியூ கட்சியில் கூண்டோடு சேரவிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
அடுத்த என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்.?
ஏற்கனவே அசாமில் 14 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர், மேகாலயாவில் ஒரு எம்எல்ஏக்கள் கூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லாமல் சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக கொள்கை ஈடுபாடில்லாதவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படுவது முதல் தவறாக பார்க்கப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைமை தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தாமலே இருந்தால், காங்கிரஸ் கட்சியில் இந்தியாவில் ஆட்சி செய்தது என்ற இருப்பே இல்லாமல் போகும் அவலமும் நடக்க வாய்ப்பு உருவாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது காங்கிரசிற்கு மிகப்பெரிய சோதனை காலமாக மாறியுள்ளதாகவே கூறுகின்றனர்.





















