Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
நாங்க 2 மணி நேரமா வரிசையில காத்திருகோம், நீங்க மட்டும் வசதியா வந்த உடனே ஓட் போடுவீங்களா என பாஜக எம்.பி ஹேமமாலினியிடம் முதியவர் ஒருவர் நேருக்கு நேர் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் மும்பை, புனே, தானே உட்பட 29 மாநகராட்சிகளில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 26 ஆண்டுகளாக தங்கள் வசமிருந்த மும்பை மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்காக உத்தக் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் நடந்த தேர்தல் வாக்குப்பதிவில் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். அந்தவகையில் பாஜக எம்.பி ஹேமமாலினியும் வாக்களித்துவிட்டு வெளியே வந்தார். அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது அங்கு வந்த முதியவர் ஒருவர் ஹேமமாலியிடம் கோபமாக வாக்குவாதம் செய்தார். நான் 7:30 மணிக்கு வாக்குச்சாவடி வந்தேன். ஆனால் 9:30 மணிக்கு தான் வாக்களித்தேன். இங்கு எதுவுமே முறையாக இல்லை. இதற்கு யாரும் பதில் சொல்ல தயாராக இல்லை. இந்த குழப்பத்திற்கு யார் பொறுப்பு என கேட்டு வாக்குவாதம் செய்தார். அனைவரும் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கும் போது ஹேமமாலினி மட்டும் வந்தவுடன் வாக்களித்துவிட்டு செல்வதாக சொல்லி எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனடியாக முகம் மாறிய ஹேமமாலினி இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி கொடுத்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் முதியவர் வாக்குவாதம் செய்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த ஹேமமாலினி, தனது அருகில் இருந்தவரை பதில் சொல்லிமாறு கூறிவிட்டு நகர்ந்து நின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாததால் பெரும்பாலான வார்டுகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.





















