மேலும் அறிய
Vairamuthu P Susheela : 'காயங்களை ஆற்றிய டாக்டர்..' பாடகி பி.சுசீலாவை வாழ்த்திய வைரமுத்து!
Vairamuthu Praises P.Susheela : மதிப்புறு முனைவர் பட்டத்தை பெற்ற பழம்பெரும் திரையிசை பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு பாடலாசிரியர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பி. சுசீலா, வைரமுத்து
1/6

இந்திய திரையுலகின் பழம்பெரும் பின்னணி பாடகிகளுள் ஒருவர் பி.சுசீலா.
2/6

60 ஆண்டுகளுக்கும் மேலாக 50 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார்.
3/6

இவர் பத்மபூஷன், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தேசிய விருது பெற்ற முதல் பாடகி என்ற பெருமையும் கொண்டுள்ளார் பி.சுசீலா.
4/6

இந்நிலையில் சமீபத்தில் கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
5/6

அந்த விழாவில் மதிப்புறு முனைவர் பட்டத்தை திரையிசை பின்னணிப் பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கினார்.
6/6

இதனையடுத்து பாடலாசிரியர் வைரமுத்து, “நீ மலர்ந்தும் மலராத பாடியபோது என் பாதிமலர்க் கண்களில் மீதி மலர்க் கண்களும் மென்துயில் கொண்டன. சிட்டுக் குருவி முத்தம் கொடுத்தபோது எனக்கு முதல்மீசை முளைத்தது. உன் கங்கைக்கரைத் தோட்டத்தில் நான் கால்சட்டை போட்ட கண்ணனானேன். சொன்னது நீதானாவென்று சொற்களுக்கிடையில் விம்மிய பொழுது என் கண்களில் வெளியேறியது ரத்தம் வெள்ளை வெள்ளையாய். காலமகள் கண்திறப்பாள் பாடியபோது என் எலும்பு மஜ்ஜைகளில் குருதியும் நம்பிக்கையும் சேர்ந்து சுரந்தன. நீ காதல் சிறகைக் காற்றினில் விரித்தபோது ஒரு தேவதையின் சிறகடியில் என் காதல் சம்பவம் நிகழ்ந்தது. நீ கண்ணுக்கு மையழகு பாடவந்தபோது சந்திரனும் சூரியனும் நட்சத்திரமும் கூழாங்கல்லும் என் தமிழும் அழகாயின. எத்துணையோ காயங்களை ஆற்றியபிறகு உன்னை டாக்டர் என்கிறார்கள் வாழ்க நீ அம்மா!!”என பி.சுசீலாவிற்கு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published at : 23 Nov 2023 11:14 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
லைப்ஸ்டைல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement