Gold Silver Rate New Peak: ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
தங்கத்தின் விலை நேற்றே புதிய உச்சத்தை அடைந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை அடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையை கேட்டால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போல் இருக்கிறது. அந்த அளவிற்கு வரலாற்று உச்சங்களை தங்கம் விலை தொட்டு வருகிறது. அதற்கு போட்டி போட்டு வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாயும், வெள்ளியின் விலை கிராமிற்கு 15 ரூபாயும் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்யின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, புத்தாண்டு முடிந்து ஏறுமுகத்திற்கு சென்றது. கடந்த வாரத்தின் முதல் நாளான 5-ம் தேதி ஒரு கிராம் 12,760 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,02,080 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 6-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,640 ரூபாய்க்கும் சென்றது.
7-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 8-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 12,750 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,02,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, 9-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வார இறுதியில், அதாவது 10-ம் தேதி சனிக்கிழமை மேலும், விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,03,200 ரூபாய்க்கும் சென்றது. 11-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான 12-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,04,960 ரூபாய் என்ற புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 13-ம் தேதியான நேற்று, மேலும் விலை உயர்ந்து, புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்தது தங்கம். அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இன்றும் விலை உயர்ந்து வரலாற்று உச்சம்
இப்படிப்பட்ட சூழலில், இன்றும் கிராமிற்கு 110 ரூபாயும், சவரனுக்கு 880 ரூபாயும் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய் என்ற வரலாற்று புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
300 ரூபாயை கடந்த வெள்ளி விலை
இதேபோல், வெள்ளி விலையும் புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில், அதாவது, 5-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 266 ரூபாயாக இருந்தது. 6-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 271 ரூபாய்க்கு எகிறியது. பின்னர், 7-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 277 ரூபாயை எட்டியது.
பின்னர், 8-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிரம் 272 ரூபாய்க்கு வந்தது. தொடர்ந்து 9-ம் தேதியும் விலை குறைந்து, ஒரு கிராம் 268 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர், வார இறுதியில் விலை உயர்ந்து, 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 12-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 287 ரூபாயாக உச்சம் தொட்டது. இந்நிலையில், 13-ம் தேதியான நேற்று கிராமிற்கு மேலும் 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 292 ரூபாய் என்ற உச்ச விலையை எட்டியது.
இந்த சூழலில், இன்று கிராமிற்கு மேலும் 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 307 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சங்களை அடைந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.






















