Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
ஹட்டாவோ லுங்கி.. பச்சாவ் புங்கி.. உங்களுடைய லுங்கியை.. அதாவது வேஷ்டியை கழட்டிவிட்டு மகுடி வாசிக்க வச்சிருவேன்.. இது தான் தமிழர்களுக்கு எதிராக 1960-70 களில் பால் தாக்கரே முன்னேடுத்த பிரச்சாரம்.. இப்படி ஒரு கீழ்தனமான கோஷம் தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்களுக்கு எதிராக ஒலிக்க தொடங்கியுள்ளது..
இன்று தமிழ்நாட்டில் வட இந்தியாவிலிருந்து வரும் இங்கே வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகச் ஒரு வெறுப்பரசியல் எப்படி தொடர்ச்சியாக கட்டவிழ்க்கபடுகிறதோ, சில தாக்குதல் சம்பவங்கள் அறங்கேறியதோ.. அதை விட பல மடங்கு வீரியமாக 1960, 1970-களில் மும்பையில் தென்னிந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் மீது வெறுப்பரசியலை பரப்பினார் பால் தாக்கரே.
அன்றைய நிலையில் மும்பையில் பல முக்கியமான பொறுப்புகளிலும், அரசு வேலைகளிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.. இந்நிலையில் சிவ சேனா கட்சியின் நிறுவரான பால் தாக்கரே, மராத்தியர்களின் வேலைவாய்ப்புகளை தென்னிந்தியர்கள் தட்டிப்பறிப்பதாக முழக்கத்தை முன்னேடுத்தார்..
அந்த முழக்கம் தான், ``ஹடாவோ லுங்கி, பஜாவோ புங்கி". லுங்கி, வேஷ்டி ஆகியவை பெரும்பாலும் தென்னிந்தியர்களை குறிக்கும் குறியீடாகப் இருந்தது.. இந்நிலையில் ஆடையை கழட்டிவிட்டு, மகுடி ஊது என்று தமிழர்களை பார்த்து சொன்னார் பால் தாக்ரே.. மகாராஷ்டிராவிலிருந்து தென்னிந்தியர்களை வெளியேற்ற பால் தாக்கரே முன்வைத்த இந்த முழக்கம் மராத்தியர்கள் மத்தியில் தீயை பற்ற வைத்தது.. அவரை பெரும் தலைவராகவும் உருவெடுக்க செய்தது.
ஆனால் 1970 மத்தியில் தென்னிந்தியர்கள் மீதான அவரின் வெறுப்பரசியல் வலுவிழக்க தொடங்கி, கம்யூனிசம் மற்றும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பில் தீவிரமாக இறங்கி இந்துத்துவாவைக் கையிலெடுத்து தனது அடுத்தகட்ட அரசியல் தளத்தை விரிவுபடுத்தினார் தாக்ரே. இது அரசியல் ரீதியாக கைகொடுத்ததாலும், மும்பையின் முக்கிய மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் சிவா சேனாவுக்கு கேட்டை மூடியது.. கடந்த 25 ஆண்டுகளாக சிவ சேனா தாராவி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியை மட்டுமே சந்திக்கிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் இத்தகைய சூழலில் ``ஹடாவோ லுங்கி, பஜாவோ புங்கி" முழக்கத்தை கையிலெடுத்துள்ளார் ராஜ் தாக்ரே. வலுவிழந்த வழக்கொழிந்த சொல்லாடலாக மாறி இருந்ததை, மீண்டும் மகாராஷ்டிர தமிழர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது இந்த சம்பவம். இதை தொடர்ந்தே அரசியல் ரீதியாக இதை கையிலெடுத்துள்ள அண்ணாமலை, ராஜ் தாக்கரேவின் முழக்கம் தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
கடந்த 1997 முதல் 2022 வரையில் 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி சிவ சேனா வசம் இருந்தது. ஆனால் இறுதியாக நடந்த 2017 மாநகராட்சித் தேர்தலில் மும்பை மாநகராட்சியை ஜஸ்ட் மிஸ்ஸில் தான் பா.ஜ.க-விடமிருந்து சிவ சேனா தட்டி பரித்தது. அதிலும் அப்போது சிவ சேனா ஒன்றுபட்ட கட்சியாக இருந்தது, ஆனால், இன்று சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து.. ஷிண்டேவின் சிவசேனா, உத்தவ் தாக்ரேவின் சிவ சேனா என்று உள்ளது.. அதிலும் பீகார் மக்களையும் வெளியேற்றுவேன் என்று தாக்ரே பேசி வருவதால், காங்கிரஸும் இவர்களின் கூட்டணியில் இல்லை.
நிலைமை இப்படி இருக்க உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் இணைந்திருக்கும் ராஜ் தாக்கரேவுக்கு களம் சாதகமாக இல்லை என்பதே தற்போதைய நிலை. மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே இடம்பெற்ற இந்தியா கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் கணிசமான வெற்றிகிடைத்தபோதிலும், சட்டமன்றத் தேர்தல் அப்படியே அதற்கு நேர்மாறாக பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமாக அமைந்ததே அதற்கு உதாரணம்.
இப்படி பட்ட சூழலில் தான் தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் ஜனவரி 9-ம் தேதி மேற்கொண்ட பிரசாரத்தில் ``மும்பை மகாராஷ்டிராவின் நகரமல்ல, அது உலகின் நகரம்" என்று கூறி தீயை பற்றவைத்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றிய ராஜ் தாக்கரே, ``ஒரு ரசமலாய் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறது. இங்கு உனக்கு என்ன வேலை" என அண்ணாமலையை நேரடியாகக் கடுமையாக விமர்சித்து.. ``ஹடாவோ லுங்கி, பஜாவோ புங்கி" என பேசியது சர்ச்சையை கூட்டி தேசிய செய்தியாக மாறியுள்ளது..





















