மேலும் அறிய
Kollywood Updates : அப்டேட் மேல் அப்டேட் விட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலிவுட்!
Kollywood Updates : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோலிவுட்டில் இருந்து நேற்று வரிசையாக பல அப்டேட்கள் வெளியானது.

கோலிவுட் அப்டேட்ஸ்
1/8

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா உள்ளிட்டோர் நடிக்கும் தி கோட் படத்தின் முதல் சிங்கிளான “விசில் போடு” வீடியோ நேற்று வெளியானது.
2/8

மாபெரும் வெற்றி கண்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இப்படம் ஜூன் மாதம் ரிலீஸாகவுள்ளது.
3/8

லோகேஷ் கனகராஜின் கதையை படமாக்கும் பாக்கியராஜ் கண்ணன், ராகவா லாரண்ஸை வைத்து பென்ஸ் எனும் படத்தை இயக்கவுள்ளார்.
4/8

தனுஷ் நடித்து இயக்கும் ராயன் படத்தின் முதல் சிங்கிள் கூடிய விரைவில் வெளியாகும் என்ற அப்டேட் வந்துள்ளது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இருக்கும் போஸ்டர் நேற்று வெளியானது.
5/8

சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகும் கங்குவா இந்த ஆண்டில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. சூரியாவின் இந்த காலத்து லுக்கையும் அந்த காலத்து லுக்கையும் இணைத்து போஸ்டர் வடிவமைகப்பட்டுள்ளது.
6/8

ப்ரேமம் நடிகர் நிவின் பாலியுடன் த்ரிஷா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் ஷூட் கூடிய விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பு வந்தது.
7/8

சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை சீரிஸின் நான்காம் பாகத்தில் இருந்து அச்சச்சோ பாடல் வெளியானது. இதில் நடிகை ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடனமாடியுள்ளனர்.
8/8

குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட கிராமத்து கதை சார்ந்த படங்களை இயக்கும் முத்தையா, அவர் மகனை வைத்து சுள்ளான் சேது எனும் படத்தை இயக்கவுள்ளார்.
Published at : 15 Apr 2024 11:15 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion