மேலும் அறிய
Keerthi Suresh : 'சமூக வலைதளத்திலேயே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்..' வதந்திகளால் வருத்தப்படும் கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் அங்குமிங்குமாய் பரவிவருகின்றன.

கீர்த்தி சுரேஷ்
1/6

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்.
2/6

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது. கேரளாவில் உள்ள முக்கிய தொழிலதிபரை கல்யாணம் செய்து கொள்ள போவதாக கூறப்பட்டது.
3/6

பின்னர் துபாயில் இருக்கும் தொழிலதிபருடன் திருமணம் ஆக உள்ளது என்றும் நெட்டிசன்கள் தகவலை பரப்பினர்.
4/6

இந்த நிலையில் திருமண வதந்திகள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “என் திருமணத்தில் என்னை விட மற்றவர்கள்தான் ஆர்வமாக உள்ளனர். சமூக வலைதளத்திலேயே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஏன் இப்படி வதந்திககளை பரப்பிகிறார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது”.
5/6

மேலும் பேசிய அவர் “நடிகையர் திலகம் படத்தில் நடித்த எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனாலும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். கமர்ஷியல் படங்களில் நடிப்பதே எனக்கு விருப்பமாக இருந்தது.ஆனால் பெண்களை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களே வந்தன. இதனால் அந்த வாய்ப்புகளை ஏற்று கொண்டேன்”என்றார்.
6/6

தற்போது தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 24 Jun 2023 05:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement