மேலும் அறிய

Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!

இந்தியாவில் இணையவழி தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் நடிகை லாவண்யா திரிபாதியும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தன்னையும், குடும்பத்தினரையும் விமர்சித்து தவறாக தகவல்கள் பரப்பப்படுவதாக பிரபல நடிகை லாவண்யா திரிபாதி ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தன் மீதும், தன்னுடைய குடும்பத்தினர் மீது சில நபர்கள் இணையத்தில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில் ஆபாசமாக கருத்துகளை பதிவிடுவதோடு மட்டுமல்லாமல் எடிட், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். கடந்த சில மாதங்களாக தனக்கு குறிப்பிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து தொடர்ச்சியாக தன்னை மற்றும் குடும்பத்தினரை குறித்து செய்திகள் மற்றும் பதிவுகளை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  

ஹைதராபாத் காவல்துறை லாவண்யாவின் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாவண்யா புகார் அளித்துள்ள சமூக வலைத்தளக் கணக்குகள் முழுமையாக ஆராயப்பட்டு வருவதாகவும், என்ன நோக்கத்திற்காக இப்படியான பதிவுகள் வெளியிடப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 78, 79ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இணையவழி தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டு வருகிறது. எனினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் குறிவைக்கப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lavanya konidela Tripathi (@itsmelavanya)

லாவண்யா திரிபாதி வாழ்க்கை

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாவண்யா திரிபாதி தெலுங்கு சினிமா மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.  இவர் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகன் வருண் தேஜை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இதற்கிடையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள லாவண்யா திரிபாதியின் அடுத்தப்படமாக சதிலீலாவதி என்ற படம் வெளியாகவுள்ளது. 

லாவண்யா திரிபாதி தமிழில் 2014ம் ஆண்டு வெளியான சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. அதன்பிறகு மாயவன், தனல் ஆகிய 3 படங்களில் மட்டுமே நடித்தார். தெலுங்கில் 15 படங்கள் வரை நடித்திருக்கும் லாவண்யா திரிபாதியும் வருண் தேஜும் 2017 ஆம் ஆண்டு 'மிஸ்டர்' படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின் 2018 ஆம் ஆண்டு 'அந்தரிக்ஷம் 9000 KMPH' படத்தில் ஜோடி சேர்ந்தனர். இதன் ஷூட்டிங்கில் தான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து 2023ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget