மேலும் அறிய
Na. Muthukumar pics: நா. முத்துகுமார் நினைவு நாள்: கவிதைகள் தொகுப்பு

நா. முத்துகுமார்
1/9

பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணடிகள்.
2/9

அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம் சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன!
3/9

காற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை!
4/9

கருப்பு வெள்ளைப் புகைப்படம் சட்டெனக் காணவில்லை பனியும் காக்கையும்
5/9

வயற்காட்டு எலியே உனக்கும் பெண் சிசுவா? பின் ஏன் நெல்
6/9

கடற்கரையில் ஊற்று தோண்டியதும் கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை
7/9

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் எங்களிடமிருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்
8/9

நள்ளிரவில் அண்ணா சாலை நியான் விளக்குகளை ரசிக்க முடியவில்லை பஞ்சரான வண்டியுடன் நான் !
9/9

சிறகுகள் உதிர்த்து வெளிவரும் பறவை கூண்டிற்கு விடுதலை.
Published at : 14 Aug 2021 02:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement