மேலும் அறிய
Adipurush movie review: ‘தூய பரெஷா… அவதார புருஷா…' ரசிகர்களை கவர்ந்ததா ஆதிபுருஷ்?..குட்டி விமர்சனம் இதோ..!
பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படம் இன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ்
1/6

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தின் முழு விமர்சனத்தை காணலாம்.
2/6

புராணக்கதையான ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆதிபுருஷ்.ரகு குல ராமனின்(பிரபாஸ்) பிறந்த கதை வளர்ந்த கதை என ராமயணத்தை பால காண்டத்தில் இருந்து தொடங்காமல் அதனை பற்றிய குட்டி அனிமேஷனை மட்டும் காட்டி, நேரடியாக ஆரண்ய காண்டத்தில் இருந்து கதையை தொடங்குகிறார் இயக்குநர் ஓம் ரவுத்.
3/6

சீதைக்கும் ராமருக்கும் இடையேயான காதல் காட்சிகளில் ராமனாகவே பிரபாஸ் வாழ்த்திருந்தாலும் அங்கங்கே பாகுபலியின் சாயல் காணப்படுகிறது. பிரபாஸின் முகமும் உடல் அமைப்பும் வி.எஃப்.எக்ஸ் செய்யப்பட்டது போல் உள்ளது.
4/6

சீதையாக நடித்து இருக்கும் க்ரித்தி சனோனின் நடிப்பு பாரட்டத்தக்கது. இலங்கை மன்னனான ராவணன் ஆஜானுபாகுவான தோற்றத்தை பெற்றுள்ளார். இருப்பினும் புராண காலத்து இராவணின் நடையும், உடையும், சிகை அலங்காரமும் சற்றும் பொருந்தவில்லை. நடிப்பும் அப்படித்தான்.
5/6

மெகா சீரியல் போல் இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை ஏனென்றால் இப்படத்தில் காதல், செண்டிமெண்ட், பாடல்கள், ஆக்ஷன் என கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான அத்தனையும் இதில் உள்ளது. டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆதி புருஷ் குழந்தைகளின் மனதை கவரலாம்.
6/6

முதல் பாகத்தில் நம்மை பொறுமையாக கதைக்குள் மூழ்க வைக்கும் ஓம் ரவுத்தின் திரைக்கதை, இரண்டாம் பாகத்தில் சூடு பிடிக்கிறது. யுத்த காண்டத்தை சுருக்கி எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் ஒன்ற வைக்கிறது.
Published at : 16 Jun 2023 02:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















