மேலும் அறிய
Anitha Sampath: அனிதா சம்பத்தின் அசுர வளர்ச்சி; 2-ஆவது வீடு வாங்கி கிரஹப்பிரவேசம்! ரசிகர்கள் வாழ்த்து மழை!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி அடைந்து வரும் அனிதா சம்பத் தற்போது இரண்டாவது வீடு சென்னையில் வாங்கி உள்ளதாக, புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அனிதா சம்பத் வாங்கிய புதிய வீடு
1/4

சில தனியார் சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பிரபலம் ஆனவர் தான் அனிதா சம்பத். பிக்பாஸ் வாய்ப்பை தன்னுடைய நண்பர்கள் மூலம் கைப்பற்றிய இவர், பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய வாழ்க்கையில் பட்ட பல கஷ்டங்கள் பற்றி பேசி இருந்தார்.
2/4

தங்களுக்கு என ஒரு வாடகை வீடு கூட இல்லாமல் கஷ்ட பட்டதாகவும், உறவினர்கள் அட்ரஸை தான் கொடுத்து கல்லூரில் கூட படித்ததாக பேசி இருந்தார். மேலும் தனக்கென ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதே தன்னுடைய பல நாள் கனவு என கூறினார்.
3/4

இவருடைய இந்த கனவுக்கு வழி வகுத்து கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் முடிந்த பின்னர் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தற்போது பவித்ரா என்கிற சீரியலில் நடித்து வரும் அனிதா சம்பத், சில தனியார் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
4/4

கைநிறைய சம்பாதிக்கும் பிரபலமாக மாறியுள்ள அனிதா சம்பத் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தன்னுடைய கனவு வீட்டை சென்னையில் வாங்கி குடியேறிய நிலையில், தற்போது இரண்டாவது வீட்டையும் வாங்கி உள்ளார். இந்த வீட்டை தன்னுடைய அம்மாவுக்காக வாங்கி இருப்பதாக, கிரஹபிரவேச புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 01 Feb 2025 12:34 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion