சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு முதன்முதலில் வெங்கட்பிரபு வைத்திருந்த பெயர் என்ன? இந்த பெயரை அதற்கு வைத்தது யார்? என்று கீழே விரிவாக காணலாம்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் வெங்கட்பிரபு. திரையுலகில் முதலில் நடிகராக அறிமுகமான இவர் பின்னர் சென்னை 60028 மூலமாக இயக்குனராக அறிமுகமானார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தின் தலைப்பை உருவாக்கிய பெருமை வாலியையே சேரும். அவர் இதுதொடர்பாக ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது,
சென்னை 28 உருவானது எப்படி?
அந்த வெங்கட்பிரபு இயக்குனராக ஆக்கிய உடனே என்கிட்டதான் அனுப்புனாங்க. படத்துக்கு என்னய்யா பேருனு? கேட்டேன். இது எங்க ஏரியா உள்ள வராதுன்னு சொன்னான். ஒருத்தனும் வாங்க வரமாட்டான்யா படத்தை அப்படினு சொல்லி, நான்தான் சென்னை 28ன்னு பெயரை மாத்துனேன்.
படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இன்னைக்கு வெங்கட்பிரபு ரொம்ப காஸ்ட்லியான இயக்குனர். அவர் காஸ்ட்லியான இயக்குனர்னு எனக்கு எப்படி தெரியும்னா, நான் கேட்குற பயங்கர சம்பளத்தை அவன் கொடுக்குறான் பாருங்க. அதை வச்சு கண்டுபிடிச்சேன் காஸ்ட்லியான இயக்குனர்னு.
3 பாட்டு:
அவ சாதாரண இயக்குனரா இருந்திருந்தா தயாரிப்பாளர் வாலி எல்லாம் ஒரு பாட்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கேட்பாருயா. வேற யாராவது வச்சுக்கலாம்னு சொல்லுவாங்களே. வாலி சாருக்கு பணத்தை கொடுனு வெங்கட்பிரபு சொன்னா, அடுத்த நிமிஷம் பணம் வருது. அப்போ காஸ்ட்லியான இயக்குனர்தானே. எல்லா படத்துலயும் நான் ஒரு 3 பாட்டு எழுதாம வெங்கட்பிரபு படமே எடுக்கமாட்டான்.
இவ்வாறு அவர் பேசியிருப்பார்.
சென்னை நகர இளைஞர்களின் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக காெண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற முதல் படம் இதுவாகும்.
வாலியின் வரிகள்:
வாலி இந்த தகவலை சென்னை 28 படத்தின் இரண்டாம் பாக திரைப்பட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பார். சென்னை 28 படத்தில் இடம்பிடித்த ஜல்சா பண்ணுங்கடா மற்றும் சாமான் நிகாலோ பாடல் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் வாலிதான் எழுதியுள்ளார். வாலி எழுதிய யாரோ யாருக்குள் இங்கு யாரோ பாடல் மிகவும் பிரபலம் ஆகும்.
அதேபோல, வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் தோஸ்த் படா தோஸ்த், கோவா படத்தில் இடம்பெற்ற அடிடா நையாண்டிய, ஊரு நல்ல ஊரு பாடல்களையும், மங்காத்தா படத்தில் மச்சி ஓபன் தி பாட்டில், நண்பனே, ஆகிய பாடல்களை வாலி எழுதியிருப்பார். பிரியாணி படத்தில் மிசிசிபி, நானநானா பாடல்களை எழுதியிருப்பார்.





















