மேலும் அறிய
Alphonse Putheran : ஒரே படத்தில் ஏழு பாடல்கள்.. இளையராஜாவுடன் கைக்கோர்த்த அல்போன்ஸ் புத்திரன்!
Alphonse Putheran Gift : அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கிஃப்ட் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

அல்போன்ஸ் புத்திரன் - இளையராஜா
1/6

மலையாள திரையுலகில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். பல குறும்படங்களை இயக்கிய அவர், 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
2/6

நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்களை கொண்டு 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு இந்திய அளவில் ஹிட் அடித்தது.
3/6

அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்திற்கு கிஃப்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மொத்தம் 7 பாடல்கள் இந்த படத்தில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/6

கிஃப்ட் படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ், சார்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
5/6

இந்த செய்தியை அறிந்துகொண்ட பிரேமம் ரசிகர்களும் இளையராஜாவின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6/6

சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த காட்டு மல்லி பாடலும் ஒன்னோட நடந்தா பாடலும் செம ஹிட்டாகி ராஜா எப்போதுமே ராஜாதான் என்று உணர வைத்தது.
Published at : 05 Jul 2023 03:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion