மேலும் அறிய

‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ உள்ளிட்ட படங்களை இயக்கி, தயாரித்து, நடித்துள்ள சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

சங்ககிரி ராஜ்குமார்   ‘ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக மட்டுமின்றி பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், திரைப்பட உருவாக்கத்துக்குத் தேவையான பல பணிகளை தனி ஒருவராக மேற்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டுக்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை சந்தித்ததாக சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார். தனது முயற்சியை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதன்பேரில் தாணு பிவிஆர் நிறுவனத்திடம் பேசியதாகவும் அவர் கூறினார். உலகில் இதுபோன்ற முயற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும், படத்திற்கு ஆதரவு வழங்குவதாக பிவிஆர் நிறுவனம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகளுக்காக இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா தனது ஸ்டுடியோவை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ராஜ்குமார் கூறினார்.

இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா பேசும்போது, ஆரம்பத்தில் தனி மனிதராக அனைத்து வேலைகளையும் செய்து படம் உருவாக்கும் முயற்சி குறித்து தனக்கும் சந்தேகம் இருந்ததாகக் கூறினார். ஆனால், படத்தை பார்த்த பிறகு ராஜ்குமாரின் உழைப்பால் ஆச்சரியமடைந்ததாகவும், ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களில் அவரே நடித்திருப்பதாகவும் பாராட்டினார். படம் தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இயக்குநர் லெனின் பாரதி, பெரிய நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் தனி மனிதராக ராஜ்குமார் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது என்றார். இப்படத்தை திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு திரையிட்டு, அதன் உருவாக்க அனுபவங்களை அவர்களுடன் பகிர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் சேரன், ராஜ்குமாரின்வெங்காயம்படத்தை பாராட்டியதுடன், ‘ONE MAN’ திரைப்படத்திற்காக அவர் சுமார் ஐந்து ஆண்டுகள் உழைத்துள்ளதாக கூறினார். அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும், கதாபாத்திரங்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு அவர் உழைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், குறைந்த பட்ஜெட்டிலும் தரமான திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை ராஜ்குமார் நிரூபித்துள்ளதாக கூறினார்.

நடிகர் சத்யராஜ், ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்படங்களை பார்த்து ராஜ்குமாரின் முயற்சியால் பிரமித்ததாக தெரிவித்தார். ‘ONE MAN’ திரைப்படம் மக்களை சென்றடைய ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும், இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு இந்தப் படத்தின் வெற்றி ஊக்கமாக அமையும் என்றும் கூறினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்காக திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ஊடகத்தினர் சங்ககிரி ராஜ்குமாரின் முயற்சியை வெகுவாக பாராட்டினர்.

இந்த நிகழ்வில் சினிமா மீது ராஜ்குமார் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், தனி மனிதராக அவர் மேற்கொண்டிருக்கும் உழைப்பும் முக்கியமாக பேசப்பட்டது. திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடும் முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதிய தலைமுறை கலைஞர்களுக்கு இப்படம் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றும் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான முயற்சியாக ‘ONE MAN’ கவனம் பெற்றுள்ளது. என்றும் பலரும் தெரிவித்தனர் அங்கு.

Advertisement

தலைப்பு செய்திகள்

‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget