மேலும் அறிய

‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா

குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் கே இசையமைக்க, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன், குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் சமூகத்தில் நடைபெறும் முக்கியமான விஷயத்தை வலுவான கருத்துடன் பேசுகிறது என்றார். இயக்குநர் சராஜ் சீலன் தனது கணவர் என்றும், 20 ஆண்டுகளாக சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் அவர் பயணித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இப்படத்திற்காக அவர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் மித்ரன் ஜவகர், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இயக்குநரின் நீண்டகால கனவு தற்போது நனவாகியிருப்பதாக சிவகுமார் விஜயன் குறிப்பிட்டார். படத்தின் கலை இயக்குநர் தாமு, எடிட்டர் சாபு ஆகியோரும் இயக்குநரின் அர்ப்பணிப்பை பாராட்டினர்.

நடிகர்கள் சாய் விக்கி, அர்ச்சனா, பிபின், விஜய் விஸ்வா உள்ளிட்டோர் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்தை இப்படம் மென்மையாக எடுத்துரைப்பதாக சாய் விக்கி கூறினார்.

நடிகை அனுமோல், சமூகத்திற்கு தேவையான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும், இயக்குநர் கூறிய கதையின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால் இப்படத்தில் இணைந்ததாகவும் தெரிவித்தார். குரு சோமசுந்தரத்துடன் நடித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் குரு சோமசுந்தரம், ‘பாரிஸ் கஃபே’ உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் என்றும், பெண்களை மதிக்காத சமூகம் முன்னேற முடியாது என்பதையும் இப்படம் பேசும் என்றும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கௌசல்யா சங்கர், திரைப்படத்தைப் பார்த்தபோது இது சமூகத்திற்கு தேவையான படமாக இருப்பது புரிந்ததாகவும், பெண்களின் உரிமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகள் தொடர்பான முக்கியமான கருத்துகளை படம் முன்வைப்பதாகவும் கூறினார்.

இயக்குநர் சராஜ் சீலன், தனது சினிமா பயணம் சிறுவயதிலேயே தொடங்கியதாகவும், பல ஆண்டுகளாக கொண்டிருந்த கனவு தற்போது இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்தார். குரு சோமசுந்தரம், அனுமோல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா சாய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget