மேலும் அறிய

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தவில்லை என்றும்  தேர்தலுக்கு பின் ஆட்சியமைக்க இபிஎஸ் திமுகவுடன் தன்னிச்சையாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

சட்டமன்றத்தில் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை கட்சிப் பொறுப்பிலிருந்து இபிஎஸ் நீக்கியிருந்தார். சில நாள்கள் கழித்து இபிஎஸ் அவர்களை மீண்டும் சேர்த்துக்கொண்டாலும், அவர்களுக்கு மீண்டும் அந்தந்த பதவிகள் கொடுக்கப்படவில்லை.

பின்னர், எஸ்.பி,வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், தன்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களுக்கும் மீண்டும் பொறுப்பு கொடுக்கும் வரையில் துணைப் பொதுச் செயலாளர் ஏற்கப் போவதில்லை எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கினார்.இந்த நிலையில் பழனிசாமி தலைமையில் அதிமுகவில் பல தவறான முடிவுகள் எடுகப்பட்டதாகவும், இதனால் அதிமுக தோல்வியை சந்தித்தாகவும் எஸ்.பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். 

அ.இ.அ.தி.மு.க-வின் தொடர் தேர்தல் பின்னடைவுகள், கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் நிர்வாகிகளின் நீக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, கட்சியின் தலைமைக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர் தலைமையின் தன்னிச்சையான போக்கிற்கும், தி.மு.க-வுடன் ஏற்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்துத் தந்த தி.மு.க எதிர்ப்புக் கொள்கைப் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கப்போவதாக உறுதியேற்றுள்ளனர். 


2019 மற்றும் 2021 தேர்தல்களில் அமமுக, தே.மு.தி.க, புதிய தமிழகம் போன்ற தோழமைக் கட்சிகளைச் சரியாக அரவணைக்காமல் வெளியேற்றியதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் பா.ம.க போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட காலதாமதமும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வழிவகுத்தது. 


மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, புதிய தமிழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருந்தும், தலைமையின் தன்னிச்சையான செயல்பாடுகளால் அந்த வாய்ப்புகள் பாழாக்கப்பட்டுள்ளன.

1972 முதல் கட்சிக்கு உழைத்தவர்கள், அம்மாவின் விசுவாசிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக விரோதமான முறையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

கோவை, திருப்பூர், நீலகிரி, கடலூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய முக்கிய நிர்வாகிகள் எந்தவிதக் காரணமுமின்றி பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது கட்சியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

எனவே, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்து, கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல மே 13, 2026-க்குப் பிறகு பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமித்து, புரட்சித்தலைவர் மற்றும் அம்மாவின் வழியில் 'மறப்போம், மன்னிப்போம்' என்ற அடிப்படையில் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நலன் கருதி வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் மாற்றுக்கட்சிக்குச் சென்ற மூத்த முன்னோடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் கழகத்தில் இணைக்கவும், தேர்தல் வியூகங்களில் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து கூட்டு முடிவுகளை எடுக்கவும் கழகத் தலைமைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி குடமுழுக்கு: தமிழ் மந்திர கோரிக்கை தள்ளுபடி.. இரு மொழிகளிலும் மந்திரங்கள் உறுதி !
மதுரை மீனாட்சி குடமுழுக்கு: தமிழ் மந்திர கோரிக்கை தள்ளுபடி.. இரு மொழிகளிலும் மந்திரங்கள் உறுதி !
நாங்குநேரி இரட்டைக் கொலை:
நாங்குநேரி இரட்டைக் கொலை: "விசாரணை குளறுபடி!" உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி, சிறப்பு குழு அமைப்பு!
மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: மாசி வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து ஸ்தம்பித்தது!
மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: மாசி வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து ஸ்தம்பித்தது!
விருதுநகருக்கு மட்டும் 25,000 கிலோ வெங்காயம்.. 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகளில் விநியோகம் !
விருதுநகருக்கு மட்டும் 25,000 கிலோ வெங்காயம்.. 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகளில் விநியோகம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Embed widget