மேலும் அறிய

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்

ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனுடன் உருவாகும் ‘AA23’ படத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிசி படத்தின் வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களால் மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறார். கூலி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோது லோகேஷ் கனகராஜை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல்  செய்து வந்தார்கள். தன்னைப் பற்றிய ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

மாநகரம் , கைதி , மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்தார். லியோ திரைப்படம் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான கூலி திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

கருணையே இல்லாமல் ட்ரோல்

கூலி திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். நேர்காணல்களில் அவர் பேசியது கருத்துகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. அதே நேரம் லோகேஷ் கனகராஜை மீம் மெட்டிரியலாக பயன்படுத்தி வைரலாக்கி வந்தனர். அருண் மாதேஸ்வரனின் டிசி திரைப்படத்தில் லோகேஷ் நடிப்பதாக தகவல் வெளியானபோதும் இப்படத்தின் டீசர் வெளியானபோது ரசிகர்கள் அவரது நடிப்பை விமர்சித்தார்கள்.

டிசி மூலம் கம்பேக்

தற்போது டிசி திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் மீண்டும் கொண்டாட தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக இப்படத்தில் அவரது நடிப்பு பரவலாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்

இந்த நிலையில் ட்ரோல்கள் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், தனது தாயாரே சில நேரங்களில் அந்த ட்ரோல்களை தனக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். ட்ரோல்களை பார்த்து பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களது படைப்பில் சிறப்பாக செயல்பட்டால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும், அதே நேரத்தில் ஏதேனும் தவறு நடந்தால் ட்ரோல் செய்வார்கள் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது முந்தைய இரண்டு படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாததால் தற்போது தன்னைப் பற்றி அதிகளவில் ட்ரோல்கள் பதிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், தனது அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜூன் படம் குறித்து

தற்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வருவதாக குறிப்பிட்ட லோகேஷ், அந்தப் படத்தின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் போது தற்போது வெளியாகும் ட்ரோல்கள் தானாகவே நின்றுவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘AA23’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget