மேலும் அறிய

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?

நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ.1 கோடி செலவில் தனி ஐடி விங் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களுக்கென வலுவான டிஜிட்டல் அணிகளை உருவாக்கி வரும் நிலையில், அதே பாணியில் தனுஷுக்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வலைதள குழு உருவாக்கப்படுவது அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனவும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள தனுஷ், சமீபகாலமாக சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற விவாதமும் அவ்வப்போது எழுந்து வருகிறது. எனினும், தனுஷ் இதுவரை அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நற்பணி மன்ற விரிவாக்கம் 

அதேநேரத்தில் அவரது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் அரசியல் விவாதங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நலச்சங்கங்களை உருவாக்கி, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபடுமாறு தனுஷ் ரசிகர் மன்றம் அழைப்பு விடுத்தது. தொகுதி வாரியாக ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, அவரது ரசிகர் அமைப்பு ஒரு கட்டமைப்புடன் செயல்படுவதற்கான முயற்சியாக கவனம் பெற்றது.

ரசிகர்களுக்கு அறிவுரை 

இதற்கு முன்னதாக ரசிகர்கள் நடத்தி வரும் நலப்பணிகளை பாராட்டிய தனுஷ், ஆடியோ வெளியீடு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அப்பால் சமூகத்திற்கு தேவையான நலப்பணிகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சென்னையில் தான் படித்த பள்ளிக்கு தனுஷ் தனது சொந்த நிதியில் புதிய கல்விக் கட்டிடத்தை அமைத்து வழங்கினார். அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தபோது மாணவர்களிடம் கல்வி மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். தனுஷின் இந்த சமூக அக்கறை சார்ந்த நடவடிக்கைகளும் அவரது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளும் அரசியல் களத்துடன் ஒப்பிட்டு பேசப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

ரூ.1 கோடி செலவில் ஐடி விங்

இந்த பின்னணியில்தான் தனுஷுக்காக சுமார் ரூ.1 கோடி மதிப்பில் சமூக வலைதள ஐடி விங் உருவாக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த குழு அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் அணிகளைப் போன்ற கட்டமைப்புடன் செயல்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும், தனுஷின் சமூக வலைதள இருப்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் தனுஷ் தொடர்பான பதிவுகளை அதிகரிப்பது, பல்வேறு தளங்களில் அவரது செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, ரசிகர்களுடன் டிஜிட்டல் வழியில் தொடர்பை வலுப்படுத்துவது மற்றும் அவரது செயல்பாடுகளை திட்டமிட்டு மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பணிகளில் இந்த ஐடி விங் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் சூழலில், அரசியல் கட்சிகளின் ஐடி விங்கள் தேர்தல் பிரசாரம் மற்றும் கருத்து உருவாக்கத்தில் முக்கிய கருவியாக மாறியுள்ளன. அந்த சூழலில் தனுஷுக்காக தனி டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படுவது அவரது அரசியல் வருகையில் அடுத்த நகர்வாக பார்க்கப்படுகிறது 

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget