மேலும் அறிய
Kannada Actor Accident: காலை இழந்த கன்னட நடிகர் சூரஜ்..முதல் படம் வெளியாக இருந்த நிலையில் பரிதாபம்!
கன்னட நடிகர் சூரஜ் குமார் விபத்தில் தனது காலை இழந்த செய்தி கன்னட திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

கன்னட நடிகர் சூரஜ்
1/6

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஏ ஸ்ரீனிவாஸ் அவர்களது மகனும் ஐராவதா தாரக் ஆகிய கன்னடத் திரைப்படங்களில் உதவு இயக்குநராக பணியாற்றியவர் நடிகர் சூரஜ் குமார்.
2/6

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து ரதம் என்கிறத் திரைப்படத்தில் நடித்து வந்தார் சூரஜ். சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தின் போஸ்டரை பகிர்ந்த சூரஜ் “உங்கள் அனைவரின் அன்புடன்” என்று பதிவிட்டிருந்தார்.
3/6

கடந்த 20 ஆம் தேதி அன்று தனது பைக்கில் ஊட்டியில் இருந்து மைசூருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார் சூரஜ். அப்போது தனக்கு முன்னிருந்த ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த சூரஜ், கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரில் வந்த டிப்பர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானார்.
4/6

பிறகு, சூரஜின் வலது கால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி முழுவதுமாக சிதைந்துவிட்டதாகவும் அவர் மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் காவல் அதிகாரி ஒருவர்.
5/6

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது கால் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
6/6

இந்தத் தகவல் கன்னடத் திரையுலகை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
Published at : 27 Jun 2023 06:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement