மேலும் அறிய
Abhishek Bachchan: ராஜா வீட்டு கன்னுகுட்டி; ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?
இந்த மணிரத்னம் பட நடிகர் இன்று தன்னுடைய 49-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரின் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி உள்ளார் இந்த நடிகரின் மனைவி.

அபிஷேக் பச்சனின் குழந்தை பருவ புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
1/7

அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சன், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்தார். இன்று தன்னுடைய 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், அப்பா அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமானோர் இன்ஸ்டா மூலமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
2/7

தன்னுடைய 24ஆவது வயதில் திரையுலகில் அறிமுகமானவர் அபிஷேக். இவருடைய முதல் படம் ரெபியூஜி (Refugee). அதன் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வந்த யுவா என்ற படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
3/7

இதைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து ஒரு சில படங்களிலேயே அப்பா அமிதாப் பச்சன் உடன் இணைந்து சர்கார் மற்றும் Bunty Aur Babli ஆகிய படங்களில் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு சென்றார்.
4/7

ஆரம்பத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த அபிஷேக் பச்சன் இன்று வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்து கொண்டிந்த போது ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு ஆராதயா என்ற மகள் பிறந்தார்.
5/7

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கடந்து வருகின்றனர். இதற்கிடையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வந்தது.
6/7

இந்த நிலையில் தான் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவருடைய குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல உடல் ஆரோக்கியம், அன்பு மற்றும் ஒளியுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று பதிவிட்டிருக்கிறார்.
7/7

2000ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் அபிஷேக் பச்சனின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.240 கோடி. இதுவே அவருடைய மனைவி ஐஸ்வர்யா ராயின் நிகர சொத்து என்று பார்த்தால் ரூ.850 கோடி முதல் ரூ.862 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக கணவன் மனைவியாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.1000 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Feb 2025 09:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion