TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 98 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
SIR Draft Roll 2026 Tamilnadu LIVE Updates: வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
LIVE

Background
SIR Draft Electoral Roll: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையிலான, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதை காணலாம்
போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருப்பவர்கள், இறந்துபோனவர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் நோக்கம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலின்படி 6.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டுச் சரிபார்த்துக் கொள்ளலாம்."
பொதுமக்களுக்கான வாய்ப்புகள் என்ன?
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்றும், வரைவுப் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் செயல்முறையின் போது சேர்க்கப்படலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன் முடிவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் இந்த திருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Varaivu Vakalar Pattiyal 2025: திருநெல்வெலி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை
திருநெல்வெலி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 2,16,966
SIR முன் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை -14,20,334
SIR பின் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை - 12,03,368
Varaivu Vakalar Pattiyal 2025: திருச்சியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை!
திருச்சி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 3,31,787
SIR முன் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 23,68,967
SIR பின் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை - 20,37,180





















