மேலும் அறிய
4 Years of Asuran : கிளைமாக்ஸில் ஆழ்ந்த கருத்தை பேசிய சிவசாமி.. 4 ஆண்டுகளை கடந்த வெற்றிமாறனின் அசுரன்!
4 Years of Asuran : .வெக்கை நாவலை முதல் பாதியாகவும், தனக்கே உரித்தான திரைக்கதையை இரண்டாம் பாதியாகவும் கொண்டு அழகான படத்தை கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.

அசுரன் படப்பிடிப்பில் வெற்றி மாறன், தனுஷ், கென்
1/5

சமூத்தை பற்றிய படங்களும் சமூக கருத்துள்ள படங்களும் ஓடாது, வணிக ரீதியாக வெற்றி பெறாது என்ற எண்ணத்தை கொல்லி பானை போல உடைத்தார் வெற்றி மாறன்.
2/5

அதன் விளைவாக பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய 3 படங்களை தொடர்ந்து 4வதாக “அசுரன்” உருவானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், பவன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.
3/5

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு அசுரன் படம் எடுக்கப்பட்டிருந்தது. வடக்கூரான் (ஆடுகளம் நரேன்) மற்றும் சிவசாமி (தனுஷ்) ஆகிய இருவருக்கும் ஏற்படும் நிலத்தகராறு பிரச்சினை, இரு வீட்டாரின் உயிர்களை எப்படி மாற்றி மாற்றி பலி வாங்கும் என்பதே படத்தின் கதை.வெக்கை நாவலை முதல் பாதியாகவும், தனக்கே உரித்தான திரைக்கதையை இரண்டாம் பாதியாகவும் கொண்டு அழகான படத்தை கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.
4/5

60 மற்றும் 80களில் நடக்கும் படத்தின் கதை அந்த கால காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து காட்டியது. நிலமற்ற மக்களுக்கு, ஆங்கிலேயர்கள் கொடுத்த பஞ்சமி நிலங்களை பற்றியும் இப்படம் விவரித்து இருக்கும். வெற்றிமாறனுக்கு பக்கப்பலமாக வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உதவியிருந்தது.
5/5

“நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க.. பணம் இருந்த பிடுங்கிடுவாங்க..ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது. நல்ல படிச்சி உயர்ந்த இடத்துக்கு வா. ஆனால் அங்க வந்து இவங்க நமக்கு செஞ்ச மாதிரி செய்து விடக்கூடாது” என்ற ஆழ்ந்த கருத்தை, தனுஷ் கிளைமாக்ஸில் பேசி 4 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது
Published at : 04 Oct 2023 12:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion