(Source: ECI/ABP News/ABP Majha)
Ukraine Russia war: உக்ரைனில் அமைதி வேண்டும்... வைரலாகும் அப்துல் கலாமின் 2007ஆம் ஆண்டு பேச்சு !
உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அப்துல் கலாமின் பழைய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் அவ்வப்போது தொடர்ந்து குண்டுகள் விழும் சத்தமும் கேட்டு வருகின்றன. பல இடங்களில் குண்டுகள் போடப்பட்டு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் போலந்து மற்றும் ரூமேனியா உள்ளிட்ட நாடுகள் மூலமாக இந்தியா திருப்பி கொண்டு வரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஐரோப்பியாவில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியது வைரலாகி வருகிறது. அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தப் போது 2007ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் கலியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார். அதன்பின்னர் அவர் ஒரு கவிதை ஒன்றை கூறியிருந்தார். அதில் உலகத்தில் அமைதி நிலவது தொடர்பாக சில வாசகங்கள் அமைந்திருந்தன. இந்த வீடியோவை தற்போது பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் தாக்குதல்கள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்