Turkey Earthquake: இடிபாடுகளுக்கு நடுவில் பிறந்த குழந்தை - உயிரிழந்த தாய், தந்தை...! இதயத்தை ரணமாக்கும் துயரம்..!
துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 21,000-ஐ தாண்டியுள்ளது. இது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் மீட்பு பணிகள்
கடந்த வியாழனன்று துருக்கி மற்றும் சிரியா எல்லைப்பகுதியில் அதிகாலை தொடங்கி மாலை வரை, அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. காலை நேரம் என்பதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த உள்நாட்டு மீட்பு படையினர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா? என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். 29 மணி நேரத்திற்கு பிறகும் சிலர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகிறது. அதேநேரம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இடிபாடுகளுக்குள் பிறந்த குழந்தை
இந்த நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்கு பிறகு இடிபாடுகளுக்கு நடுவில் இந்த குழந்தை பிறந்துள்ளதாக மீட்பு பணியில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த குழந்தையின் பெற்றோர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இட்லிப் மாகாணத்தில் துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள நகரமான ஜின்டாய்ரிஸில் கட்ட இடிபாடுகளிலிருந்து இந்த பச்சிளம் மீட்கப்பட்டது. இந்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர் ஒருவரின் மனைவி, பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
This baby was born while his mother was under the rubble of the earthquake in Aleppo, Syria and she died shortly after he was born. pic.twitter.com/hIoGphMohl
— Xerxes (@khashayarrr_) February 6, 2023
பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது தொடர்பாக வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த துயரமான நிகழ்விலும் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது சந்தோஷத்தை தருவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
21,000 பேர் பலி:
இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 21,000 -ஐ கடந்துள்ளது. குறிப்பாக துருக்கியில் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சிரியாவில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது, கடந்த 2011ம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க