மேலும் அறிய

"நிறைய குழந்தைய பெத்துக்கோங்க" - கண்களில் கண்ணீர் மல்க அட்வைஸ் கொடுத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், அந்நாட்டு பெண்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதற்கு நேர்மாறாக ஜப்பான், ரஷியா, வடகொரியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

"அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்"

இந்த நிலையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், அந்நாட்டு பெண்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கண்களில் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டு பேசும் வடகொரிய அதிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பெண்களும் வடகொரிய அதிபரின் பேச்சை கேட்டு அழுகின்றனர். அப்போது பேசிய கிம் ஜான் உன், "பிறப்பு விகிதங்கள் குறைவதைத் தடுப்பதும் குழந்தை பராமரிப்பும் தாய்மார்களுடன் பணிபுரியும் போது நாம் கையாள வேண்டிய கடமைகள்.

தேசத்தை வலுப்படுத்துவதில் தாய்மார்களின் பங்குக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கட்சி பணி, தேச பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது தாய்மார்களை பற்றியே நினைப்பேன்" என்றார்.

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில், வடகொரியாவின் பிறப்பு விகிதம், 1.8ஆக பதிவாகியுள்ளது. அதாவது, ஒரு பெண்ணுக்கு 1.8 குழந்தைகள் பிறக்கிறது. வட கொரியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடுகையில், வட கொரியாவில் கருவுறுதல் விகிதம் அதிகம் பதிவாகியுள்ளது. 

வட கொரியாவில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்:

இருப்பினும், வட கொரியாவை போல அதன் அண்டை நாடுகளிலும் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் 0.78ஆக குறைந்துள்ளது. ஜப்பானில் கருவுறுதல் விகிதம் 1.26ஆக குறைந்துள்ளது.

எட்டு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் பேசியிருந்தார். "ரஷிய பெண்கள், எட்டு குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். பெரிய குடும்பத்தை உருவாக்குவதை வழக்கமாக கொள்ள வேண்டும். நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்ளும் வழக்கத்தை ரஷியாவில் பல இனக்குழுக்கள் பின்பற்றி வருகின்றன.

ரஷிய குடும்பங்கள், எங்கள் பாட்டி மற்றும் கொள்ளு பாட்டிகளில் பலருக்கு ஏழு, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்வோம். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்களாக இருப்பதை வழக்கமாக மாற்ற வேண்டும்" என ரஷிய அதிபர் தெரிவித்திருந்தார்.                                                        

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
US Threat Khamenei Escape: அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
Stalin Vs Ashwini Vaishnaw: கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்
Vijay Constituency | லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! 2 இடங்களில் விஜய் போட்டி? தயக்கத்தில் தவெக?
US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
US Threat Khamenei Escape: அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
Stalin Vs Ashwini Vaishnaw: கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
DMK Master Plan : ‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
Congress alliance: பல்டி அடிக்கிறதா காங்கிரஸ்.? மாவட்ட தலைவர்களுக்கு பறந்த உத்தரவு.. டெல்லியில் திடீர் நடந்த ட்விஸ்ட்
பல்டி அடிக்கிறதா காங்கிரஸ்.? மாவட்ட தலைவர்களுக்கு பறந்த உத்தரவு.. டெல்லியில் திடீர் நடந்த ட்விஸ்ட்
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
Vijay constituency : ‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
Embed widget