Nepal Missing Aircraft: 4 இந்தியர்கள் உட்பட 22 பயணிகள்! கிடைத்தது தொலைந்துபோன விமானம்.. எங்கே தெரியுமா..?
முஸ்டாங்கின் கோவாங்கில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விமானத்தின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
போஹ்ராவிலிருந்து (Pokhara) ஜாம்சோம் (Jomsom) நகருக்கு 4 இந்தியர்கள் உட்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட Tara Air's 9 NAET என்ற விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, இன்று காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தொலைந்துபோன Tara Air's 9 NAET என்ற விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக ANI தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
Nepal | Tara Air's 9 NAET twin-engine aircraft carrying 19 passengers, flying from Pokhara to Jomsom at 9:55am, has lost contact: Airport authorities
— ANI (@ANI) May 29, 2022
இதுகுறித்து ANI தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நேபாளத்தில் பயணிகளுடன் மாயமான விமானம் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும், முஸ்டாங்கின் கோவாங்கில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விமானத்தின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
#UPDATE | Aircraft found at Kowang of Mustang. The status of the aircraft is yet to be ascertained: Tribhuvan International Airport chief
— ANI (@ANI) May 29, 2022
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் நாராயண் சில்வால் தெரிவிக்கையில், நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்படி, தாரா ஏர் விமானம் மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் லாம்சே ஆற்றின் முகத்துவாரத்தில் விழுந்து நொறுங்கியது. நேபாள ராணுவம் தரை மற்றும் விமானப் பாதையில் இருந்து தளத்தை நோக்கி நகர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொலைந்துபோன இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர், மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் மாயமானது குறித்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இது குறித்து முழுமையான தகவல் விசாரணையில் தெரிய வரும் என்றும், இந்த விமானம் ஜாம்சோமில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் வானில் தெரிந்ததாகவும், தொடர்பை இழப்பதற்கு முன்பு, விமானம் தெளலாகிரி மாவட்டத்தை நோக்கி பயணிக்க திசை திருப்ப சொல்லப்பட்டதாகவும் மஸ்டாங் மாவட்ட தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்