Villupuram: விழுப்புரத்தில் தனி ஆளாய் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு
விழுப்புரம்: ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனி ஆளாய் தங்கள் ஊருக்கு நூலகம் அமைத்து தரக்கோரி விழுப்புரம் ஆட்சியர் பழனியிடம் இன்று மனு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனி ஆளாய் தங்கள் ஊருக்கு நூலகம் அமைத்து தரக்கோரி விழுப்புரம் ஆட்சியர் பழனியிடம் இன்று மனு அளித்தார். பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக செய்து தருவதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமலைப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட அரசுபள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதிய நூலக வசதி இல்லை என்பதாலும் தங்கள் பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி திருமலைபட்டு கிராமத்தை சார்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி வருணிதா விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு!https://t.co/wupaoCzH82 | #Villupuram #tamilnadu #library #collector pic.twitter.com/TnLXqU1Tqc
— ABP Nadu (@abpnadu) February 27, 2023
விடுமுறை நாட்கள் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று விளையாடுவதினால் விஷ ஜந்துக்கள் கடிப்பதாகவும், மாணவர்கள் தீய செயல்களில் ஈடுபடாமல் இருக்க நூலகம் அமைத்து தர வேண்டும் மாணவி கோரிக்கை வைத்துள்ளார். மாணவியின் வேண்டுகோளை ஏற்ற ஆட்சியர் சி. பழனி உடனடியாக பள்ளியில் நூலகம் அமைக்க கூடுதலாக புத்தகம் வழங்குவதாக உறுதி அளித்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்