மேலும் அறிய
Advertisement
முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்...
விளையாட்டு துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுரை.
ஓய்வூதியத்திற்கான தகுதிகள் :
சர்வதேச/தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்று இருத்தல் வேண்டும். சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
தகுதியான விளையாட்டுப் போட்டிகள்: ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சமமேௗனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேறிருந்தல் வேண்டும்.
வயதுவரம்பு :
2024-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் (31.08.2024) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
மாத வருமானம்:
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும் (வருமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்) ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்/மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் (Veteran/Masters sports meet) வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் நேரம் :
இவ்வாணைய இணையதளம் www.sdat.tn.gov.in- மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 01.09.2024 முதல் 30.09.2024 அன்று மாலை 6.00 மணி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரையுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மூலமாக தலைமை அலுவலகத்திற்கு 14.10.2024- என்ற தேதிக்குள் அனுப்பிவைக்கபட வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய :
மேற்கண்ட ஓய்வூதியம் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ ( 7401703485) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion