மேலும் அறிய
சீருடை தைக்க ஆண் டெய்லர்... கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக மாணவி பரபரப்பு புகார்
மதுரையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கைது, தள்ளுமுள்ளு

கைது
Source : whats app
மதுரையில் மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆண் டெய்லர்களை பயன்படுத்தி கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கைது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது போக்சோ
மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட எம்.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக ஆண் டெய்லரை பயன்படுத்தி 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அளவு எடுக்க வைத்ததாக மாணவி அளித்த புகாரின் கீழ் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் டெய்லரை கைது செய்ய வேண்டும், இனி ஆண் டெய்லர்கள் மாணவிகளுக்கு சீருடை அளவீடு செய்யும் பணிக்கு பயன்படுத்த கூடாது என கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக ஆண் டெய்லரை பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pamban Bridge: எழுதப்படும் புதிய வரலாறு.. பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி - எப்போ தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Job Fair: வேலை தேடும் சிவகங்கை இளைஞர்களே... இதோ உங்களுக்கான நேரம் வந்தவிட்டது.. மிஸ் பண்ணாதீங்க
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement