Semi High Speed Train: 90 நிமிடங்களில் சென்னைக்கு போயிடலாம்... வேலூர், விழுப்புரம், சேலம் மக்களே ரெடியா இருங்க..!
Semi High Speed Train in Chennai: சென்னைக்கு 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து, சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

Regional Rapid Transit System (RRTS): சென்னை மிகவும் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கான மக்கள், சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
எனவே, சென்னைக்கு பொது போக்குவரத்து சேவையை, அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் அருகே இருக்கும் சிறு நகரங்களை விரைவாக சென்றடையும் வகையில், புதிய போக்குவரத்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
செமி ஹை ஸ்பீடு ரயில் -Semi High Speed Train
அந்தவகையில், சென்னையில் இருந்து மூன்று வழிதடங்களுக்கு, "செமி ஹை ஸ்பீட்" (Semi High Speed Train) ரயில் திட்டம் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையிலிருந்து விழுப்புரம், வேலூர் மற்றும் சேலம் ஆகிய மூன்று வழித்தடங்களில் "செமி ஹை ஸ்பீட்" ( Semi High Speed Train) ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சாத்திய கூறு குறித்து ஆய்வு நடத்த, சென்னை மெட்ரோ சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தலைகீழாக மாறும் மூன்று நகரங்கள்
மத்திய அரசு நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் , "செமி ஹை ஸ்பீட்" ( Semi High Speed Train) ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், உதவியுடன் தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னையை இணைக்கும் வகையில் மூன்று வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை -வேலூர், சென்னை - விழுப்புரம் மற்றும் சென்னை - சேலம் ஆகிய வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்கள் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட உள்ளன. குறைவான நிறுத்தங்களில் இந்த ரயில்கள் நிறுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. 15 பெட்டிகள் கொண்ட ரயிலாக இவை இயங்கும்.
சாத்தியக்கூறு தயாரிப்பது குறித்த டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதங்களில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். வழித்தடம், நிறுத்தங்கள் அமைவிடம், தேவையான நிலம் மற்றும் செலவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.
சிறப்பம்சங்கள் என்ன? Key Features Of Semi High Speed Train
வேலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து பொது போக்குவரத்து மூலம் பொதுமக்கள் வரவேண்டும் என்றால், பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்து வருகிறது. சேலத்திலிருந்து விமானம் மூலம் வரவேண்டும் என்றாலும், அதற்கான தொகை அதிகமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் 150 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். எனவே இதுபோன்ற ரயில்கள் இயக்கப்பட்டால் 90 நிமிடங்களில் சென்னை அடைய முடியும். அதேபோன்று, விலையும் சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட்டின் போது, முக்கிய நகரங்களில் இணைக்கும் வகையில் மண்டல போக்குவரத்து முறை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது டெண்டர் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பணிகள் பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

