Liquor Abuse : மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சென்னை வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...
புதுச்சேரி: மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சென்னை வாலிபரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்.
புதுச்சேரியில் உள்ள நேரு வீதியானது எப்போதும் அதிக மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படக்கூடிய சாலையாகும்.
இந்த சாலையில் சென்னை பதிவெண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக சென்றது. அத்துடன், அங்கிருந்த இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடி அந்த வேகமாக கார் சென்று கொண்டிருந்தது. முத்தியால்பேட்டை சென்ற அந்த கார், அங்கேயும் ஒருசில பேர் மீது மோதிவிட்டு சென்றது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றுகொண்டிருந்த அந்த காரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது விமான நிலையத்தின் தடுப்புச்சுவர் அருகே வைத்து காரை வழிமறித்த பொதுமக்கள், காரில் இருந்த 5 பேரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில், காரில் இருந்தவர்கள் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார், அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் வருவதைப்போல, கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாக சென்றுதும், அந்த காரை பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் மடக்கி பிடிக்க முற்பட்ட சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்