ஓடும் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர்: தவறி ஆற்றில் விழுந்து உயிரிழப்பு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் சென்ற திருச்செந்தூர் விரைவு ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்துக்காக ரயில் மற்றும், சாலை மார்க்கத்திற்கான இரு பாலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ரயில் பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையினை அகல ரயில்பாதையாக மாற்றிய சமயத்தில் அந்த பாலம் புதிதாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் சென்றுள்ளது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து ஒரு இளைஞர் பயணித்துள்ளார். ரயில் பாலத்தை கடந்த நிலையில் படியில் அமர்ந்த அந்த இளைஞரை காணவில்லை.
ED Raid: அடுத்த ரெய்டு...தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...காரணம் என்ன?
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என கருதி சீர்காழி இரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் அங்குள்ள ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரயில்வே போலீசார் தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் ஆற்றின் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி அவரது உடலை மீட்டு பாலத்தின் மேலே கொண்டு வந்து உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அப்பாஸ் என்பதும், பெயின்டரான இவர் சென்னையில் இருந்து பாபநாசம் சென்ற போதுதான் கொள்ளிடம் பாலத்தில் இரயில் செல்லும் போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் இருந்து ஆற்றினுல் விழுந்து உயிரிழந்தது தெரியவந்து.
Latest Gold Silver: தொடர்ந்து குறையும் தங்கம் விலை...சவரனுக்கு எவ்வளவு...இன்றைய நிலவரம் இதுதான்!
சக பயணிகள் துரிதமாக தகவல் கொடுத்தத நிலையிலும், படுகாயம் அடைந்ததால் இளைஞரின் உடலைதான் மீட்க முடிந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து என எவ்வளவு எச்சரித்தும் அதனை பின்பற்றாததால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக இரயில்வே போலீசார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.