மேலும் அறிய
Advertisement
Kamaraj: முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிராக 810 பக்க குற்றப்பத்திரிகை, 18,150 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு எதிராக 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர். காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் 2021 ஆம் ஆண்டு அவரது வீடு மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 07.07.2022 ஆம் ஆண்டு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள் இனியன், இன்பன் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கடந்த 01.04.2015 நாள் முதல் 31.03.2021 வரை அமைச்சராக காமராஜ் பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும் அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவர்களின் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து மொத்தம் 58 கோடியே 44 லட்சத்து 38,252 ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளால் 5 வருடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ ஆர் சி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்கிற பெயரில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை கட்டியும் இதர வகைகளிலும் 127 கோடியே 49 லட்சத்து 9085 ரூபாய் அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
இந்த வழக்கில் புலன் விசாரணை தற்போது முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவரிடம் இசைவாணை பெற்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை சிறப்பு நீதிபதி நீதிமன்றத்தில், காமராஜ் அவரது மகன்கள் இனியன் இன்பன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் படி உரிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது
இந்த குற்றப்பத்திரிகை 810 பக்கங்கள் கொண்டது. அதனுடன் 18,150 ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion