Jyotika on Vijay | ”என் புருஷன் கேவலமா போயிட்டாரா குப்பை படத்த கொண்டாடுறாங்க” விஜயை சீண்டிய ஜோதிகா?
மோசமான படத்திற்கு எல்லாம் நல்ல விமர்சனங்கள் வரும்போது என் கணவர் சூர்யாவின் கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்தது எனக்கு பிடிக்கவில்லை என ஜோதிகா தெரிவித்துள்ளார். இதில் தென் இந்தியாவில் எக்கச்சக்கமான மோசமான படங்கள் வந்து வசூல் ரீதியாக வெற்றியடைவதை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளது நடிகர் விஜயை தாக்கி பேசியுள்ளதாக கூறப்படுவது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 300 கோடி பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படமாக உருவான கங்குவா வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கும் பெரிய நஷ்டமாக அமைந்தது. ஒரு படம் நன்றாக இல்லையென்றால் அதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவது வழக்கம்தான். ஆனால் கங்குவா படத்தைப் பொறுத்தவரை சமூக வலைதளம் முழுவது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வெளியாகின. இதனால் கடுப்பான சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா படத்திற்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
கங்குவா படத்தில் ஒரு சில குறை இருந்தாலும் படத்தின் நன்றாக இருக்கும் அம்சங்களை ஏன் விமர்சகர்கள் பாராட்டவில்லை என்கிற கேள்வியை அவர் எழுப்பினார். பெண்களை இழிவு படுத்தும் விதமாக வெளியாகும் மற்ற படங்களை விட கங்குவா படம் மேல் என ஜோதிகா கங்குவா படத்திற்கு ஆதரவாக பதிவிட்டார். இதனால் ரசிகர்கள் அவரையும் சேர்த்து ட்ரோல் செய்யத் தொடங்கினார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.
மோசமான படங்களுடன் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. தென் இந்தியாவில் எக்கச்சக்கமான மோசமான படங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த படங்கள் எல்லாம் பெரிய மனதுடன் வரவேற்கப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால் என் கனவரின் படம் என்று வரும் போது அதை கொஞ்சம் கடுமையாக விமர்சித்தார்கள் என்று எனக்கு தோன்றியது. படத்தில் ஒரு சில காட்சிகளில் பிரச்சனைகள் இருந்தது ஆனால் மொத்தமாக எக்கச்சக்கமான உழைப்பு இந்த படத்தில் உள்ளது. இது ஒரு தனித்துவமான படம். அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வருவதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை " என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இதில் தென் இந்தியாவில் எக்கச்சக்கமான மோசமான படங்கள் வந்து வசூல் ரீதியாக வெற்றியடைவதை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளது சமீபகாலமாக வெளியான நடிகர் விஜயின் பீஸ்ட், லியோ, கோட் போன்ற திரைப்படங்கள் பலவிதமான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது என ஜோதிகா நடிகர் விஜயை தாக்கி பேசியுள்ளதாக கேள்வி எழுந்துள்ளது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.





















