மேலும் அறிய
Vaikunda Ekadasi: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு
வைகுண்டவாசல் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வைகுண்டவாச பெருமாள்
வைகுண்ட ஏகாதசி என்பது ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்தில் நுழைவதற்கு முன்பு வரும் ஏகாதசி ஆகும். புராணங்களின்படி, விஷ்ணு மூர்த்தி கருட வாகனத்தில் மூன்று தெய்வங்களுடன் முல்லோகாலத்திலிருந்து பூலோகத்திற்குள் நுழைந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். அதனால்தான் இந்த ஏகாதசியை முக்கொடி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இவை அஷ்டாதச புராணங்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புனித நாளில் சொர்க்கத்திற்கான பாதை திறக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இந்த நாளில் விரதம் இருந்தால் ஆயிரக்கணக்கான வருட தவத்தின் பலன் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன்படி வண்டிமேடு அருகே உள்ள ஸ்ரீகனகவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைகுண்டவாசல் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. டிசம்பர் 13 ஆம் தேதி முதல் ஜனவரி 23ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. தினமும் காலை 7 மணிக்கு திருமஞ்சனமும் காலை 11 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம் முடிந்து நித்ய பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு சொரச்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்டவாசல் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பத்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த லட்டு கமிட்டிக்குழுவினர் லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி விழுப்புரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்காக சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில் லட்டு கமிட்டிக்குழுவினர் மற்றும் சமையல் கலைஞர்கள் பலர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த லட்டுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டதும் பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement