மேலும் அறிய

”கிராமப்புற தொடக்கப் பள்ளிகளை திறக்க அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவும்” - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி, Citizen Consumer and Civic Action Group என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப் புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல் பூர்வ ஆலோசனைகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி, சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக அவற்றை விற்று விடுவதாக வாதிட்டார். மேலும் அவர், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்க்ளுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தார். இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த கணிப்பும் இல்லாததாலும், கிராமப் புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆலோசனைகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாணவர்களுக்கு சத்துணவு சென்றடையச் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget