Pongal Rain: தமிழ்நாட்டில் பொங்கல் நாளில் மழை பெய்யுமா? வானிலை மையம் புது அப்டேட்.!
Tamilnadu Pongal Day - Rain Updates: தமிழ்நாட்டில் வரும் 14 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், அடுத்த 5 நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களே பொங்கலுக்கு உள்ள நிலையில், பலரும் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலரும், எதிர்பார்த்து காத்திருக்கும் பொங்கல் பண்டிகை தினத்தன்று எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREAhttps://t.co/LOvDNF1Sqf pic.twitter.com/8oboNYjDii
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 11, 2025
பொங்கல் பண்டிகை- கனமழை:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையானது, வரும் 14 தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று, மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் ( ஜனவரி 14 ), தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்று: 11-01-2025:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-01-2025:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை தஞ்சாவூர், நாகப்பட்டினம் திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-01-2025:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-01-2025:
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூந்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15:01-2025:
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-01-2025 மற்றும் 17:01 2025:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை:
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் இருக்கும் எனவும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

