மேலும் அறிய

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேரோட்டம்.... திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு...! 

சீர்காழி அடுத்த திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான பிரசித்தி பெற்ற வண்புருஷோத்தமன் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் வைணவ சமயத்தின் முக்கிய 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். புராணக் கதையின் படி, ஒரு முறை மஹா பிரளயம் (பெரிய வெள்ளப்பெருக்கு) ஏற்பட்டது. உலகம் முழுவதும் நீரால் மூழ்கிக்கொண்டிருந்தது. அப்போது பூமிதேவி பெருமாளை தொழுதுப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வேண்டியுள்ளார். அதற்கு வண்புருஷோத்தமன் பெருமாள் அவதரித்து, பூமிதேவியை தனது திருக்கரங்களால் காப்பாற்றி, நிலையான அமைதியை வழங்கினார். இதன் அடிப்படையில் இத்தலத்திற்கு "பூமி நிலை பெற்ற ஸ்தலம்" என்ற சிறப்புப் பெயர் உள்ளது.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேரோட்டம்.... திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு...! 

நாரத முனிவரின் தவம்

நாரத முனிவர் ஒருமுறை சிவன் அருளைப் பெறுவதற்காக தவம் இருந்தார். ஆனால் சிவபெருமான், "நீ முதலில் வண்புருஷோத்தமன் பெருமாளை தரிசிக்க வேண்டும்" என்று கூறினார். நாரதர் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு, பின்னர் சிவனைப் போற்றினார்.

திருநாங்கூர் 11 திவ்யதேசங்களில் ஒன்றாகும்

திருநாங்கூர் பகுதியில் 11 திவ்யதேசங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று வண்புருஷோத்தமன் கோயில் ஆகும். திருமங்கை ஆழ்வாரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும்.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேரோட்டம்.... திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு...! 

கோயில் கட்டிடக்கலை & சிறப்புகள்

கோயில் அழகான திராவிடக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவராக உள்ள வண்புருஷோத்தமன் பெருமாள் கிழக்கு நோக்கி காட்சியளிப்பார். மகாலட்சுமி (திருமாமகள் நாச்சியார்) தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.கோயிலில் உள்ள தேர்த்திருவிழா, கருட சேவை, மற்றும் பங்குனி உத்சவம் மிகவும் பிரசித்தி பெற்றவை.

வழிபாட்டு பலன்கள்

இந்தத் திருத்தலத்திற்கு வருபவர்கள், தங்களின் வாழ்வில் உயர்வைப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. திருமணத் தடைகள் நீங்க வேண்டுமெனக் கேட்டு வழிபட்டால் விரைவில் திருமண யோகமுண்டாகும். தாயாரை வழிபட்டால் குடும்பத்தில் செழிப்பு ஏற்படும். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில், வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ, பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம். ஆகையால் இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது. 

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேரோட்டம்.... திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு...! 

ஆண்டு பிரமோற்சவ திருவிழா 

இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் பெருமாள் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த மார்ச் 17 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள் கொடி மரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கருட கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பெருமாள் மற்றும் கொடி மரத்திற்கு மகா தீப ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் உற்சவம் இன்று நடைபெற்றது. பெருமாள் திருப்பாற்கடலில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேரோட்டம்.... திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு...! 

திருத்தேரோட்டம்

முன்னதாக திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரோட்டமானது தொடங்கியது. மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க, தேரானது நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து இறுதியாக நிலையை அடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
Embed widget