மேலும் அறிய

Online Rummy: இந்த முறை மிஸ் ஆகாது! ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. இன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு?

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதோ நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதோ நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 மாதம் வரை ஒப்புதல் அளிக்காமல் கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு அரசு போதிய விளக்கம் அளிக்கவில்லை என கூறி திருப்பி அனுப்பி வைத்தார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு நிதிநிலை பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் முக்கியமாக தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 21ஆம் தேதி வேளாண் துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

22ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபை நடைபெறவில்லை. நேற்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. முதலில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதன் பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிரிழந்துள்ளதாகவும், இந்த சட்ட மசோதா அறிவால் அல்ல உள்ளத்தால் நிறைவேற்றப்படுகிறது என கூறினார்.

ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை தாக்கல் செயத் பின் எதிர்க்கட்சியினர் அதன் மீதான கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சட்ட மசோதாவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம், செல்வப்பெருந்தகை, ஜி.கே மணி என அனைவரும் கருத்து தெரிவித்து பேசினர். பின் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா இன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவை அலுவலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ள நிலையில் நேற்றைய தினம் அவர் டெல்லிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget